Largest Flight Training Center Opens In Chennai By Global Flight Handling Service

365082 Zee.jpg

விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம்  சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. 

பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து  அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது.  

சென்னையில் விமான நிலையம்  அருகே,  8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.  

விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க  அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது இந்த பயிற்சி மையம். 

குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் என்பது அயோத்தி மற்றும் திருப்பதி போன்ற தெய்வீக நகர விமான நிலையங்கள் உட்பட இந்தியாவின்  22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.  குறிப்பாக அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நிகழ்வின் போது 48 மணி நேரத்தில் 158 க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை இந்நிறுவனம்  வெற்றிகரமாகக் கையாண்டது.   

பாபா ராம்தேவ், ஆலியா பட், ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப், அமிதாப் பச்சன், லக்ஷ்மி மிட்டல், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் மற்றும் பிற உயர் அரசியல்வாதிகளை இந்நிறுவன ஊழியர்கள் மிகச்சிறப்பாக கையாண்டு பாராட்டு பெற்றவர்கள்.  

இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்
விமானப் பள்ளி,  கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை  கற்றுத்தர உள்ளது. அதற்கேற்ற வகையில் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், லைப்ரரி மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய 3 வகுப்பறைகள் உள்ளன. 

மேலும் படிக்க | தென்னாந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு… பிரமிக்கவைக்கும் நூற்றாண்டு கடந்த வரலாறு!

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷனின் நிர்வாக இயக்குநர் சரிதா கூறுகையில், இந்தப் பள்ளி சிறந்த மனித வள மேம்பாட்டுடன் செயல்படும் என்றும்,  தற்போது 700 விமானங்கள் மற்றும்  130 விமான நிலையங்களில்   செயல்படும் இந்த நிறுவனம் இன்னும் சில வருடங்களில் 2000 விமானகளுடன் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் செயல்பட உள்ளது என்றார்.  இது மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்த உள்ளது என்றும்  தெரிவித்த அவர், தகுதியுடைய சிறந்த விமானத்துறை பணியாளர்களை உருவாக்குவது தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டார். 

தலைமை நிர்வாக அதிகாரி ஶ்ரீராம் கோவிட்டிற்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை என்றும் குறிப்பிட்டார். இந்த பயிற்சி மையம் சென்னையில் விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றார் 

இந்த நிகழ்ச்சியில், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் தலைவர் வீரராகவலு, நிர்வாக இயக்குநர் சரிதா சிங், விமான நிலைய பாதுகாப்பு தலைவர் நம்பி, திரு. விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க | தலைவர் விஜய் ஆப்சென்ட்… ரகசிய இடத்தில் மீட்டிங் – முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *