சென்னை மாநகராட்சி: பெண்கள் சைக்காலஜி சர்ச்சை டு ஊழல்… பரபரத்த புத்தாண்டின் முதல் மாமன்ற கூட்டம்! |Chennai corporation Council meeting 2024 – Issues and actions!

Chennai.jpg

`அம்மா உணவகத்தில் முறைகேடு; கவுன்சிலர்களுக்கும் வாக்கி டாக்கி வேண்டும்’:

அதைத்தொடர்ந்து பேசிய 11-வது மண்டலம் தி.மு.க வார்டு கமிட்டி தலைவர் நொலம்பூர் ராஜன், “அம்மா உணவக ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.300 வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. வேலைக்கே வராமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு கணக்கு காட்டுகின்றனர். 152-வது வார்டிலுள்ள அம்மா உணவகத்தில் அரிசு, பருப்புகளை கையாடல் செய்த ஊழியர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். இதேபோல பல முறைகேடு சம்பவங்கள் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவருகிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!” என ஆதங்கப்பட்டார். தொடர்ந்து பல கவுன்சிலர்களும் எழுந்து இந்த கருத்தை ஆமோதித்தனர்.

அதேபோல, “அவசர காலங்களில் பணிகளை கண்காணிக்க கமிஷனர், மேயர், துணை மேயர்களுக்கு வாக்கி – டாக்கி வசதி இருப்பது போல, அனைத்து கவுன்சிலர்களுக்கும் புதிதாக வாக்கி-டாக்கி வாங்கி கொடுக்க வேண்டும். அதற்கான நிதியை இந்த காலாண்டில் ஒதுக்க வேண்டும்!” என கோரிக்கை வைத்தார். இதற்கு அவையில் சிரிப்பலை எழுந்தது.

மேயர் பிரியா ராஜன்

மேயர் பிரியா ராஜன்

`கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் முறைகேடு; ஒரு கழிப்பறை கூட கட்டப்படவில்லை’:

அதேபோல கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவர் க.தனசேகரன் எழுந்து பேசியபோது, “சென்னை மாநகராட்சியில் கடந்த அ.தி.முக ஆட்சியில் மக்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான முன்பணம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றிருக்கிறது. மூன்று மண்டலங்களைத்தவிர மற்ற 12 மண்டலங்களிலிருந்து முறையான கணக்குகள் ஒப்படைக்கவில்லை. அதேபோல, நட்சத்திர விடுதிகளின் வரி வசூலிப்பிலும் ஊழல் நடைபெற்றிருக்கிறது” என குற்றம்சாட்டினார். மேலும், “கடந்த ஆண்டு ரூ.431 கோடியில் மண்டலம் 5,6,9-களில் புதிய கழிவறை கட்டுவதற்கான டெண்டர் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரையில் ஒரு கழிப்பறைகூட கட்டப்படவில்லை!’ என குற்றம்சாட்டினார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

தொடர்ந்து கவுன்சிலர்கள், மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்கு குழு தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஸ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரிய பதில் வழங்கி மாமன்ற கூட்டத்தை நிறைவு செய்தனர். கூட்டத்தின் இறுதியில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, மின்வாரியம் தொடர்பான தீர்மானத்துக்கு (பொருள் எண்: 18) கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். `மாநகராட்சி மின்வாரியத்தில் அதிகமாக ஊழல் நடக்கிறது’ என சில கவுன்சிலர்கள் குற்றம்சாட்ட, `அந்த வார்த்தையை மட்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்’ என தி.மு.க ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம் கேட்டுக்கொண்டார். பிறகு, மின்வாரியம் தொடர்பான அந்தத் தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *