`காஸாவில் புதிய நிர்வாகம்’ – போருக்குப் பிந்தைய இஸ்ரேலின் திட்டம் என்ன?!

Untitled Design 75 .jpg

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களாகப் பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதில், 22,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கும் சூழலில், ஹமாஸை அழிக்கும் வரை போர் நீடித்துக்கொண்டே இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.

காஸா

இதற்கிடையில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் (Yoav Gallant) கடந்த வியாழனன்று, காஸா பகுதியின் போருக்குப் பிந்தைய நிர்வாகத்திற்கான தனது திட்டத்தை முன்வைத்தவர், போர் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸும் இஸ்ரேலும் பாலஸ்தீனப் பகுதியை ஆளப்போவதில்லை என்று கூறினார். பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு முன், அறிக்கையைப் பத்திரிகையாளர்களிடம் கேலண்ட் வெளியிட்டார்.

அதில்,“அக்டோபர் 7 அன்று கைப்பற்றப்பட்ட பிணைக்கைதிகளை மீட்டெடுக்கும் வரை, ஹமாஸின் எஞ்சியிருக்கும் இராணுவ அச்சுறுத்தல்களை அகற்றும் வரை இஸ்ரேலின் போர் தொடரும். அதற்குப் பிறகு, ஹமாஸ் காஸாவையும் கட்டுப்படுத்தாது, இஸ்ரேல் குடிமக்களுக்கும் அச்சுறுத்தல் இருக்காது. ஏனென்றால், உள்ளூர் பாலஸ்தீனிய அமைப்புகள் காஸாவின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்கின்றன. இந்த நிர்வாகம் இஸ்ரேல் எல்லைக்குள் செயல்படும்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம்

மேலும், போரின் இலக்குகளை அடைந்த பிறகு காஸா பகுதியில் இஸ்ரேலிய குடிமக்கள் இருக்கமாட்டார்கள்” என்றார். இதற்கு முன்னர் இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir), “இஸ்ரேலியர்கள் போருக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், பாலஸ்தீனிய அதிகார சபையின் பிரதமர் முஹம்மத் ஷ்டய்யே பைனான்சியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேலின் எந்த இறுதி முடிவிலும் காஸாவுக்கு மட்டுமின்றி பாலஸ்தீனத்திற்கும் ஒரு அரசியல் தீர்வு இருக்க வேண்டும்.

முஹம்மத் ஷ்டய்யே

இஸ்ரேல் மேற்குக் கரையிலிருந்து காஸாவை அரசியல் ரீதியாகப் பிரிக்க விரும்புகிறது. மேலும், இஸ்ரேல் காஸாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததையும் நான் நம்பவில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதியான காஸா இராணுவத்தின் கீழ் செயல்படும். அதன் நிர்வாகத்தை இஸ்ரேல் உருவாக்கித் தரப்போகிறது என்றே நினைக்கிறேன். எனவே பிரச்னை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *