ரேஷனில் `பொங்கல் பரிசு’… காத்திருக்கும் மக்கள் – அரசு அறிவிப்பு எப்போது வரும்?! | Pongal gift in ration, waiting people – farmers… When will the government announce?

61dd37f50ce76.jpg

இதையடுத்து, விமர்சனங்களை தவிர்க்க 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு பல டிசைன்களில் வேட்டி, சேலை மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் திருநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட இல்லாத நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் குறித்து அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக அரசு - பொங்கல்

திமுக அரசு – பொங்கல்

இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம். “நடப்பு ஆண்டுக்கான பொங்கல் திருநாளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவதால், வழக்கம்போல் இல்லாமல் 2000 அல்லது 2500 ரூபாய் வழங்கலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, தென்காசி மாவட்டத்துக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, பொங்கலுக்கு வழங்கலாம் என்று திட்டமிட்ட 2000 அல்லது 2500 ரூபாய் வழங்க மேலிடம் யோசிக்கிறது.

தொகையை ஆயிரமாக்கவும் திட்டமிடுகிறது. அதேநேரத்தில், இந்த தொகையை வழங்கினால் வெள்ள பாதிப்பு அல்லாத மாவட்ட மக்கள் அதிருப்தியாகவும் வாய்ப்பு இருப்பதால், மேலிடம் முடிவு எடுக்கமுடியாமல் இருக்கிறது. இந்த பொங்கலுக்கு பொருள்கள் பெரிய அளவில் இடம் பெறாது. ஏனென்றால், பொருள்கள் வழங்கவதாக இருந்தால், அதற்காக டெண்டர் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரிலேயே வெளியிட்டு, பொருள்களை கொள்முதல் செய்திருக்கவேண்டும். ஆனால், பொருள்கள் வழங்குவதில் சிக்கல் இருப்பதால், அதை மேலிடம் தவிர்த்துவிட்டது. அதன்படி, இந்த பொங்கலுக்கு ரொக்கத்தோடு வழக்கமாக கொடுக்கப்படும் பொருள்கள் மட்டுமே கொடுக்கப்படும். கரும்பு கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பும், ரொக்கம் எவ்வளவு என்ற அறிவிப்பும் இந்த வாரத்துக்குள் வெளியாகும்.” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *