செம! இனி உள்ளூர் கரன்சியிலேயே இந்தியா – அமீரகம் இடையே வர்த்தகம்.. பிரதமர் மோடி சொன்ன மேஜர் தகவல் | India and the United Arab Emirates agreed to start trade settlement in local currencies- PM Modi

Screenshot805131 1689420717.jpg

Abu Dhabi

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரஃபேல் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல், இந்தியாவில் மிகவும் பிரபலமான யுபிஐ பண பர்த்தவனை வசதி பிரான்சிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் பிரான்சும் இணைந்து பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன.

 India and the United Arab Emirates agreed to start trade settlement in local currencies- PM Modi

வரும் நாட்களில், இது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும், அதாவது இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாயில் பணத்தைச் செலுத்த முடியும்” என்று கூறினார். பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தை அனுமதிப்பது என்பது மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனெனில், யுபிஐ வசதி அமலுக்கு வந்த பிறகு அங்கே சுற்றுலா செல்லும் இந்தியர்கள் செலவு செய்ய ஒவ்வொரு முறையும் பணத்தை வெளியே எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகும்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அங்கிருந்து நேராக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஒருநாள் பயணமாக சென்றார். ஐக்கிய அரபு எமிரேட்சியின் அபுதாபி வந்த பிரதமர் மோடிக்கு பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஷயாத் அல் நஹ்யான் வரவேற்றார். இதையடுத்து பிரதமர் மோடி, அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது எரிபொருள், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருநாடுகள் சார்ந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் கரன்சி மூலமாகவே இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தகத்தை தொடங்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 85 பில்லியன் டாலராக உள்ளது. இது 100 பில்லியன் டாலரை தாடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஏன் முக்கியம்? இருநாடுகளுக்கும் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் மத்திய வங்கிககள் கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, உள்ளூர் கரன்சிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க பொதுவான கட்டமைப்பை ஊக்குவிக்க இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று உதவும்.

அதாவது, இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹாம் ஆகியவை எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் கரன்சியை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பரிவர்த்தனை செலவுகள் குறைவதோடு பரிவர்த்தனைகளுக்கான நேரமும் குறையும் என்றும். அது மட்டும் இன்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரியும் இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்புவதிலும் உள்ள சிரமங்கள் குறைய உள்ளது.

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்தியாவின் யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐபிபி(IPP) ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாகவும் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்ந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா – ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை வர்த்தக உறவுகள் மட்டும் இன்றி இந்தியர்கள் அங்கு அதிக அளவில் பணிபுரிகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களும் அதிகம். எனவே தற்போது பண பரிவர்த்தனையில் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த புதிய ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்குமே பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வசதி இருப்பது இங்கே கவனிக்ககூடிய ஒன்றாகும். முன்னதாக பிரான்ஸ் சுற்றுப்பயணம் செய்து இருந்த பிரதமர் மோடி, யுபிஐ தொடர்பான மேஜர் அறிவிப்பை அங்கு வெளியிட்டு இருந்தார்.

அதாவது, இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்த யுபிஐ பயன்படுத்தி பிரான்சிலும் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. இந்தியாவும் பிரான்சும் இணைந்து பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வரும் நாட்களில், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாயில் பணத்தைச் செலுத்த முடியும்” என்று பிரதமர் கூறியிருந்தார்.

English summary

Prime Minister Modi, who is on a tour of the United Arab Emirates, met the President of the country, Sheikh Mohammed bin Zayed Al Nahyan. During this meeting various agreements were signed between the two countries. In particular, it has been announced that trade between India and the UAE will take place in the local currency.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *