Uncategorized

ஜோதிடம்

1245146.jpg

பொதுப்பலன்: தங்க, வெள்ளி ஆபரணங்கள் வாங்க, புது உடை வாங்க மற்றும் அணிய, புது தொழில் தொடங்க, வாகனம் வாங்க, அன்னதானம் செய்ய நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் எள் அல்லது நெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். சிவஸ்துதி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம்,  தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை

யடைவீர்கள். அக்கம் பக்கத்தினரின் தொல்லை குறையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகும். பேச்சில் நிதானம் காப்பது அவசியம். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் மேன்மை உண்டு.

மிதுனம்: கேட்ட இடத்தில் உடனடியாக பணம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். பழைய வழக்குகள் சாதகமாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

கடகம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் – வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்பு கூடும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனம் செலவு வைக்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மேன்மை உண்டு. அலுவலகத்தில் குழப்பம் தீரும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்

பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதிய வாகனம் வாங்குவீர். பங்குதாரர்களுடன் இணைந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் உங்கள் மீதான வீண் பழி தீர்ந்து, அந்தஸ்து உயரும்.

துலாம்: புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். இல்லத்தில் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் கவுரவ பதவிகள் வந்து சேரும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் எதிர்கால படிப்பு, வேலைவாய்ப்பு தொடர்பாக வீண் குழப்பங்கள், அலைச்சல் அதிகரிக்

கும். அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்ப்பதே நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும்.

தனுசு: மனப் போராட்டங்கள் ஓயும். சமயோசிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். பங்குதாரர்களுடன் இணைந்து புதிய கிளை திறப்பீர்கள். அலுவலகத்தில் உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயம் மாறும்.

மகரம்: மின்சார சாதனங்களை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பழைய கடனை நினைத்து இனி வருந்த வேண்டாம். புது வழி பிறக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: தொட்டதெல்லாம் துலங்கும். தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேன்மை உண்டு. புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.

மீனம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். மனைவியின் உடல்நலத்தில் கவனம் தேவை. பணவரவு இருந்தாலும் செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *