ஷீலா மீன்.. வியப்பா இருக்கே.. “சீலா மீன்” சாப்பிட்டா வெயிட் குறையுதா? நிஜமா? நோயை விரட்டும் ஊளி மீன் | Health Specialities of Sheela Fish and Do you know what are the top 10 Health uses of Cheela Fish

Screenshot13353 1689423149.jpg

Health

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது.. அப்படிப்பட்ட மீன்தான் ஷீலா மீன்..!!

ஷீலா மீனை சீலா மீன் என்பார்கள்.. ஊளி மீன் என்பார்கள்.. மாவுலா மீன் என்பார்கள்.. அதேபோல, இந்த ஷீலா மீனிலேயே 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாம்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும்.. அதேபோல, கரைச்சீலா, ஓலைச்சீலா, குழிச்சீலா, இப்படி நிறைய இருக்கிறது.. இந்த அனைத்தையும் விட அதிக ருசி தரக்கூடியது நெய் மீன் என்று சொல்லக்கூடிய நெய் ஷீலா மீன்தானாம்..

Health Specialities of Sheela Fish and Do you know what are the top 10 Health uses of Cheela Fish

ஷீலா / சீலா: மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஷீலா மீன்.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்..இதிலுள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பேருதவி புரிகின்றன..

இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்கும்.. பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது.. இதிலுள்ள வைட்டமின் பி 12- நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.. ஹை புரோட்டீன் உள்ள மீன் இந்த ஷீலா மீன்.. ஷீலா மீனின் 3-அவுன்ஸ் சுமார் 22 கிராம் புரோட்டீனை கொண்டிருக்கிறதாம்.

இதயத்துக்கு பாதுகாப்பு: இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடிய, இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த ஷீலா மீன்… ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கவும் இந்த மீன்கள் உதவுகின்றன.. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

கண்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மீன் வகைகளிலே இந்த மீனில்தான் கொழுப்பு சத்து குறைவாக இருக்கிறது.. குடல் புண்கள் சரிசெய்யக்கூடியது.. பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த மீன்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.

பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் ஏற்படும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.. அந்த தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அருமருந்துதான், ஷீலா மீன்.. இந்த மீனிலுள்ள நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதால், தோல் அழற்சி நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.

நீரிழிவு நோயாளிகள்: ஷீலா வகை மீன்களில், ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பயன்படும் பிரிடாக்சின் அதிக அளவு நிரம்பியுள்ளதால், நம்முடைய ரத்த உற்பத்தியையும் இது சீராக்குகிறது.

முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்துதான் இந்த மீன்.. இந்த மீனில் உள்ள சத்துகள், நீரிழிவு நோயை தடுக்க உதவு புரிவதுடன், உடல் சோர்வையும் நீக்குவதில் பெரும் பங்காற்றுகிறது. அடிக்கடி உணவில் சீலா மீனை சேர்த்து கொண்டால். நுரையீரலுக்கு நல்லது. ஆஸ்துமா பிரச்சனையும் சரிசெய்கிறது.

அதேபோல, ஆண்களின் உயிரணுக்களின் எண்ணி்க்கையை அதிகரிப்பதில் சீலா மீனுக்கு நிறைய பங்கு உள்ளது.. பாதிப்படைந்த ஆண்கள், இந்த வகை மீனை உட்கொண்டால், அதிலிருந்து மெல்ல மீண்டு வரலாம்.

Health Specialities of Sheela Fish and Do you know what are the top 10 Health uses of Cheela Fish

கிரில் மீன்: டீப் ஃபரை செய்யாமல், எண்ணெய் சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.. குழம்பு தவிர, ஷீலா மீனில் சாலட் செய்தும் சாப்பிடுவார்கள்.. சிலர், வெறும் ஷீலா மீனை வேக வைத்து சாப்பிடுவார்கள்.. மீனை சுத்த செய்து, உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள்.. குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிட்டால், முழு சுவையும் கிடைக்கும்.. அல்லது சுட்டு சாப்பிடலாம்..

இந்த மீனை சமைப்பதால், எப்பொழுதும் ஃப்ரஷ்ஷான மீன்களை பார்த்து வாங்க வேண்டும்.. எவ்வளவு சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சுதானே? அதனால் அளவுடன் சாப்பிட்டு, நிறைவான பலனை அடையலாம்.

English summary

Health Specialities of Sheela Fish and Do you know what are the top 10 Health uses of Cheela Fish

Story first published: Saturday, July 15, 2023, 17:43 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *