500 ரூபாய் முதலீடு போதும்.. ஜம்ஜம்முனு இருக்கலாம்.. எஸ்பிஐ-யின் பெஸ்ட் பென்ஷன் திட்டம் என்ன தெரியுமா | Savings Scheme and SBI Retirement Benefits Fund with only 500 Rupees Deposit

Newproject 2023 07 28t191526 574 1690551951.jpg

Chennai

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: 500 ரூபாய் முதலீடு செய்து, ஓய்வுகாலத்தில் நிம்மதியாக வாழ முடியுமா? அதற்காகத்தான், எஸ்பிஐ புதிய ஓய்வூதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

வயோதிகத்தில் ஏற்படும் பெரிய பிரச்சனையே வருமானம்தான்.. பங்கு சந்தையில் முதலீடு செய்தாலும்கூட, சிலசமயங்களில் அது கவிழ்த்துவிட்டுவிடும் என்ற பயம் பரவலாகவே அனைவரிடமும் பற்றிக்கொண்டுள்ளது. அதனால்தான், ஓய்வூதிய திட்டங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஓய்வுபெறும்போது பெறப்படும் தொகையை, சரியான இடத்தில் முதலீடு செய்தால், மூத்த குடிமக்கள் நிம்மதியாக இருக்கலாம்.. வருங்காலத்தில் தங்களுக்கு பண பிரச்சனை வராமல் இருக்கவும், யார் தயவையும் நாடாமல் இருக்கவும், மனநிம்மதியுடன் இருக்கவுமே பல ஓய்வூதிய திட்டங்கள், தற்போது நடைமுறையில் உள்ளன..

Savings Scheme and SBI Retirement Benefits Fund with only 500 Rupees Deposit

அதில் ஒன்றுதான், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இந்த திட்டமானது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது வேறு எந்த சேமிப்பு திட்டங்களைக் காட்டிலும் அதிகப்படியான வட்டி விகிதத்தை வழங்கக்கூடியது.

யார் யார் கணக்கு தொடங்கலாம்: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது… விஆர்எஸ் என்று சொல்லப்படும் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்…

இதுபோலவே, இன்னொரு ஓய்வூதிய திட்டம் SBI வங்கியின் ரிட்டையர்மெண்ட் பெனிஃபிட் ஃபண்ட் திட்டமாகும் (SBI Retirement Benefits Fund).. 40 வயது உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்..

மியூச்சல் ஃபண்ட்: இதற்கு காரணம், மியூச்சுவல் ஃபண்டில் உள்ள பென்சன் திட்டங்களில் முதலீடு செய்தால், நம்பிக்கையை வலுப்படுத்தக்கூடியது.. உங்களின் முதலீட்டின் மீது டபுள் மடங்கு லாபத்தை அளிக்கக்கூடியது.. அந்தவகையில், இந்த திட்டத்துக்கு வெறும் ரூ.500 ரூபாய் முதலீடு போதும்.. அதே போல அதிகபட்ச தொகை ஆண்டுக்கு ரூ. 5000 ஆகும்.

குறைந்த முதலீடு 500-ல் ஆரம்பித்து, உங்கள் வருங்காலத்திற்கான பென்சன் தொகையை சேமிக்க முடியும். குறிப்பாக, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல பென்சன் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

 ‛எதுவுமே வேண்டாம்’.. ரூ.2000 நோட்டை எப்படி எளிதாக மாற்றலாம்? எஸ்பிஐ வங்கி முக்கிய விளக்கம்.. செம! ‛எதுவுமே வேண்டாம்’.. ரூ.2000 நோட்டை எப்படி எளிதாக மாற்றலாம்? எஸ்பிஐ வங்கி முக்கிய விளக்கம்.. செம!

லாபம்: கடந்த வருடம் பிப்ரவரியில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.. அதற்குள் இந்த ஃபண்டின் மொத்த சொத்து மதிப்பானது ரூ.778.69 கோடியாக உள்ளது… இதற்கு காரணம், இது சற்று அதிக சந்தை அபாயங்களுடைய திட்டமாகும். அதிகபட்ச தொகை ஆண்டுக்கு ரூ. 5000 ஆகும்..

அதேபோல, இந்த திட்டத்தில், எந்தவொரு வெளியேறும் கட்டணமும் கிடையாது. ஆண்டுக்கு சராசரியாக 22.44% ஆண்டு வருமானத்தையும் வழங்குகிறது. பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் என்பதே, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவைதான்.. அதனால், முதலீடு செய்வதற்கு முன்பு ஆலோசகர் யாரிடமாவது விசாரித்து, சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்வது மிகச்சரியானது என்கிறார்கள்.

English summary

Savings Scheme and SBI Retirement Benefits Fund with only 500 Rupees Deposit

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *