Villagers serving mini snacks to government school students | தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அரசு பள்ளி

364876 Students.jpg

கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாகராயம் பாளையத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு (10th and 12th Class) வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் நெருங்கயுள்ளதால் தற்போது மாலை நேர, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாலை நேர, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் சமயங்களில் காலை முதல் மாலை வரை இடைவிடாது பாடங்களைப் படிக்கும் இந்த மாணவ, மாணவியர் தொடர்ந்து நடக்கும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் இந்த மாணவர்கள் பசியால் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு, முன்னாள் மாணவர்கள் அமைப்பு, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்றவர்களின் உதவியுடன் மினி சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னெடுத்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் ஒத்துழைப்பு நடத்தப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு மாணவ மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த மினி சிற்றுண்டி திட்டத்தில் தினமும் மாலை நேரங்களில் வெஜிடபிள் பிரியாணி, சுண்டல், பச்சைப் பயிறு என விதவிதமாக ஆரோக்கியமான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேரத்தில் சோர்வு நீங்கி படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததாகவும் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விழுந்து விபத்து

இந்நிலையில் இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் கூறுகையில்,10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி மாதம், மார்ச் மாதங்களில் தினமும் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகவும், இதில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு மாலை நேர மினி சிற்றுண்டியாக தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, சுண்டல், பச்சைப் பயிறு உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கி வருவதாகவும், இதன் மூலம் மாணவ மாணவியர் சேர்க்கையும், தேர்ச்சி சதவீதமும்  உயர்ந்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவி வருவதால் இந்த திட்டம் தற்போது வரை சுணக்கமின்றி நடைபெற்று வருகிறது.

மேலும் பொதுமக்கள் உதவியுடன் எதிர்வரும் காலங்களிலும் இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என தலைமையாசிரியர் செந்தில்குமார் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கிராம மக்களின் இந்த முயற்சி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கேஎஸ் அழகிரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *