தொடர் சித்ரவதை… துபாயில் படகை திருடி, 10 நாள் கடலில் பயணம் செய்து மும்பை வந்த 3 தமிழர்கள் | 3 Tamils stole boat from Dubai and came to Mumbai after 10-day journey

Boat.jpeg

வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்லும் சிலர், சரியான வேலை கிடைக்காமல் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்வதுண்டு. அவர்களிடம் பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக் கொள்வதுண்டு. இப்படியான சம்பவத்தில் இருந்து தப்பி மும்பை வந்திருக்கிறார்கள் 3 தமிழர்கள்.

மும்பை கடற்கரை பகுதிக்கு சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்று வந்தது. அந்த படகை கடலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கேட்வே ஆப் இந்தியா பகுதிக்கு கொண்டு வந்தனர். படகில் 3 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. மூன்று பேரும் அப்துல்லா சரபத் என்ற மீன்பிடி படகை துபாயில் இருந்து திருடி வந்திருந்தனர்.

மூன்று பேரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாயிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வேலை செய்த இடத்தில் இரண்டு ஆண்டுகளாக சம்பளம் கொடுக்காமல் சரியாக சாப்பாடும் கொடுக்காமல் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் வேலை செய்த இடத்தில் ஓனர் அதிகப்படியான வேலை கொடுத்து சித்ரவதை செய்ததோடு அவர்களின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டார்.

இதனால் அவர்களால் ஊருக்கும் திரும்ப முடியவில்லை. எனவே அங்கிருந்து தப்பித்து வர என்ன செய்வது என்று மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டினர். அவர்கள் வேலை செய்த இடத்தில் படகு ஒன்று இருந்தது. அப்படகை திருடிக்கொண்டு இந்தியா நோக்கி வந்துள்ளனர். அவர்கள் கடலில் 10 நாட்கள் பயணம் செய்து ஜிபிஎஸ் துணையோடு மும்பை வந்ததாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களிடம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மூன்று பேரிடமும் ஆதார் கார்டு இருக்கிறது.

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் படகு மூலம் மும்பை வந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு பிறகு மும்பை கடலில் மும்பை போலீஸார் பாதுகாப்பை அதிகரித்து இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *