"மரியாதையுடன் நடத்துங்கள்; நாங்களொன்றும் பள்ளி குழந்தைகளல்ல" – ஜக்தீப் தன்கரிடம் ஜெயா பச்சன்

Screenshot 2024 02 07 08 45 51.png

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில், ராஜ்ய சபாவில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கும், எம்.பியும், திரைப்பட நடிகையுமான ஜெயா பச்சனுக்கும் இடையே காரசாரமான விவாதம் அரங்கேறியிருக்கிறது. முன்னதாக, ராஜ்ய சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, விமானப் போக்குவரத்து துறை சம்பத்தப்பட்ட குறித்த கேள்வி தவிர்க்கப்பட்டிருகிறது. அப்போது, ஜெயா பச்சன், காங்கிரஸ் எம்.பி தீபிந்தர் சிங் ஹூடா உட்பட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சிலர், ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷிடம் `ஏன் குறிப்பிட்ட கேள்வி தவிர்க்கப்பட்டது?’ எனக் கேள்வி கேட்டனர்.

ராஜ்ய சபா

தொடர்ந்து அவையில் சலசலப்பு ஏற்பட, அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறுக்கிட்டு, எதிர்க்கட்சி எம்.பி-க்களை இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றார். இருப்பினும், தீபேந்தர் சிங் ஹூடா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டே இருந்தார். உடனே ஜக்தீப் தன்கர், “நீங்கள் ஒன்றும் அவரின் (ஜெயா பச்சன்) செய்தித் தொடர்பாளர் அல்ல. இங்கு நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டியதில்லை. அவர் மிகவும் மூத்த உறுப்பினர்” என்று கூறியதோடு சிறுது நேரம் கழித்து, கேள்வி எண் 19-க்கான பதில் முடிந்த பிறகு, தவிர்க்கப்பட்ட கேள்வி எண் 18, எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர், ஜெயா பச்சன் பேச எழுந்தபோது மீண்டும் குறுக்கிட்ட ஜக்தீப் தன்கர், “ஜெயா ஜி நீங்கள் மிகவும் மூத்த உறுப்பினர். நீங்கள் எதைச் சொன்னாலும் அதற்கு இங்கு நல்ல மதிப்பு இருக்கிறது. உங்களைப் போன்ற ஒரு சிறந்த நடிகர் பல ரீடேக்குகளையும் எடுத்திருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

ஜக்தீப் தன்கர் – ஜெயா பச்சன்

அதையயடுத்து, தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என ஆரம்பித்த ஜெயா பச்சன், ஜக்தீப் தன்கரை நோக்கி, “உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. நீங்களோ அல்லது அவைத் துணைத் தலைவரோ எங்களை உட்காரச் சொன்னால், நாங்கள் அதை செய்வோம். ஆனால், வேறொரு உறுப்பினர் எங்களை உட்காருமாறு சைகை செய்தால் நாங்கள் அதை செய்ய மாட்டோம்.

ஜெயா பச்சன்

கேள்வி கேட்பது என்பது எங்களின் உரிமை. ஒரு கேள்வியை எடுத்துக்கொள்ள முடியாது என்றோ அல்லது அதில் சிக்கல் இருக்கிறதென்றோ இல்லை அந்த கேள்வி பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் என்றோ நீங்கள் கூறினால், அதை நங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் ஒன்றும் பள்ளி குழந்தைகள் அல்ல. ஆனால், எங்களை மரியாதையுடன் நடத்துங்கள்” என்றார். இந்த காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *