ஞானவாபி: “ஒரு முறை ஏமாற்றப்பட்டோம்; மீண்டும் ஏமாற மாட்டோம்..!” – ஒவைசி |If the other side wants to do a December 6, we will see what happens, Owaisi said gyanvapi mosque issue

686b9f7ba00119a15b5fb40cb4d40c5b Original.webp.png

இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், மக்களவை எம்.பி-யுமான ஒவைசி, டிசம்பர் 6-ஐ அவர்கள் மீண்டும் நிகழ்த்த விரும்பினால் என்ன நடக்கிறதென்று பார்ப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா டுடேவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து பேசிய ஒவைசி, “நாங்கள் எந்த மசூதியையும் கொடுக்கப் போவதில்லை. நாங்கள் நீதிமன்றங்களில் போராடுவோம். அதேசமயம், டிசம்பர் 6-ஐ (பாபர் மசூதி இடிப்பு மற்றும் கலவரம்) அவர்கள் மீண்டும் நிகழ்த்த விரும்பினால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு முறை நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எனவே, மீண்டும் நாங்கள் ஏமாற மாட்டோம்.

மோடி, அமித் ஷா

மோடி, அமித் ஷா

மேலும், ஞானவாபி மசூதி அடியில் இந்து மதத்துக்கான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவதற்கு, “நாளைக்கே குடியரசுத் தலைவர் மாளிகையைத் தோண்டத் தொடங்கினால், நாங்கள் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்போம். அந்த இடத்தில் நூற்றாண்டுகளாக நாங்கள் தொழுகை நடத்தி வருகிறோம்” என்று கூறிய ஒவைசி, “எங்களைப் (இஸ்லாமியர்கள்) பொறுத்தவரை பிரதமர் மோடி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்துக்காக மட்டுமே பிரதமர் தனது அரசியலமைப்பு கடமைகளைச் செய்துவருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *