IIT Delhi: “நல்ல மதிப்பெண்கள் பெறுவது வாழ்வில் மிக முக்கியமான விஷயமல்ல” டெல்லி உயர் நீதிமன்றம்! | Scoring Good Marks Not Most Important In Life – Delhi High Court

Man 3653346 1280.jpg

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர், “இறந்தவர்களின் பெற்றோரின் உணர்வுகளை இந்த நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என இளம் மனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வளர்ந்து வரும் போக்கை  ஊக்கப்படுத்தக் கூடாது. 

ஐஐடி ஆசிரியர்களும் மற்ற ஊழியர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது. நல்ல மதிப்பெண்களைப் பெறுவதும் சிறந்ததைச் செய்வதும் முக்கியம் தான்; ஆனால், அது மட்டுமே வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் அல்ல. மன அழுத்தங்களுக்குள் சிக்காமல் ஒருவர் நிச்சயமாகச் சிறப்பாகச் செயல்பட முடியும்.  

Depression (Representational image)

Depression (Representational image)
pixabay

இந்த இரண்டு வழக்குகளையும் அரசு தரப்பு ஆய்வு செய்துள்ளது. காவல்துறை, ஐஐடி எஸ்சி/ எஸ்டி செல் அல்லது மற்ற நண்பர்களிடமும் தாங்கள் எதிர்கொள்ளும் சாதிய ரீதியான பாகுபாடு குறித்து இறந்த மாணவர்கள் எவரும் புகார் கூறவில்லை.

பெற்றோரின் அவலநிலையையும் அவர்கள் அனுபவித்த வேதனையையும் இந்த நீதிமன்றம் நன்கு அறிந்திருந்தாலும், வெறும் உணர்வு அல்லது அனுதாபத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது” என்று கூறியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *