AIADMK Jayakumar About Lok Sabha Elections 2024 Alliance BJP O Panneerselvam Latest News | ‘ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது’ – பாஜக குறித்து ஜெயக்குமார் அதிரடி

362087 Jan29005.png

AIADMK Jayakumar BJP Annamalai: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழு மற்றும் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஜெயக்குமார் கலந்துகொண்டார். 

கூட்டணி உரிய நேரத்தில் தெரியவரும்

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,”எடப்பாடி தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் விளம்பரக் குழு கூட்டம் என மூன்று குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும்.

வடக்கில் என்ன ஆனது, இந்தியா கூட்டணி நெல்லிக்காய் முட்டை போல் சிதறி வருகிறது, அதுபோன்ற நிலை தமிழகத்திற்கும் வரும். யாரு வேண்டுமானாலும் கடைசியில் கட்சியில் சேரலாம், சேராமாலும் போகலாம். இன்னும் பல நாட்கள் உள்ளது. உரிய நேரத்தில் தெரியவரும்.

மேலும் படிக்க | ‘சங்கி என்பது கெட்டவார்த்தை அல்ல…’ ரஜினிகாந்த் கொடுத்த புதிய விளக்கம்

பேச்சுவார்த்தை என்பது கொள்கை முடிவு

ஒவ்வொரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துக்கள், முரண்பாடுகள் உண்டு.. இது உரிய காலம் இல்லை, உரிய காலம் வரும் போது எங்களுடன் யார் வருகிறார்கள் நாங்கள் எங்கு நிற்கிறோம் என்று சரியான நேரத்தில் தெரிய வரும்.

பல முறை சொல்லியாகிவிட்டது, தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும், பாஜகவுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை; அந்த பெட்டியை கழற்றிவிட்டாச்சு. அந்த பெட்டியை மீண்டும் சேர்ப்பதற்கான எண்ணமே கிடையாது. தேமுதிக, பாமக கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்பது கொள்கை முடிவு. நான் இப்போது சொல்ல முடியாது” என்றார்.

விவசாயிகள் தோழர் அதிமுகதான்

அதிமுகவினர் மத்தியில் சென்று பாஜக தலைமையின் காலில் விழுவதாக அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு,”கற்பனை கதை, அண்ணாமலை நடக்காத விஷயத்தை கூறினால் மக்கள் தொண்டர்கள் என யாரும் நம்ப மாட்டார்கள். அண்ணா அண்ணா என ஊளை கும்மிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை” என்றார்.

அதிமுக பாஜகவை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யுமா என்ற கேள்விக்கு… “யார் தவறு செய்தாலும் சரி…. மாநில நலனை புறக்கணிப்பவர்களை அடையாளம் காட்டுவோம். பாஜக 10 ஆண்டுகளில் மாநில உரிமைகளை புறக்கணித்ததை அடையாளப்படுத்துவோம். மாநில அரசு செய்த தவறுகளை மக்களிடம் கொண்டு செல்வோம்” என்றார்.

ஆளுநரின் கீழ் வெண்மணி கருத்து குறித்த கேள்விக்கு, “விவசாயிகள் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும். உண்மையான விவசாயிகள் தோழர் அதிமுகதான். இந்த தேர்தலில் விவசாயிகள் ஒட்டு மொத்த விரோதமும் திமுகவை சேரும்” என்றார்.

ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது

அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடியிடம் அமித்ஷா கூறியதாக ஓ.பி.எஸ். பேசியது தொடர்பான கேள்விக்கு,”இ.பி.எஸ் ஒரு கட்சியின் தனித்தன்மையை நிலைநாட்டி உள்ளார். ஓபிஎஸ் பாஜகவின் கொத்தடிமையாக உள்ளார். இவர் போல எல்லோரும் இருக்க முடியுமா ? இந்த பேச்சு மூலம் பாஜக கொத்தடிமை அவர் என்பதை நிரூபித்து உள்ளார். 

எங்களுடன் கூட்டணி வரவில்லை என்றால் பின்விளைவு அனுபவிப்பீர்கள் என சீனிவாசன் கூறியுள்ளார். உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை. பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது. சொல்லிவிட்டு கூறவில்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது. ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது. அதிமுக சிங்கங்களாக வரும் நேரத்தில் அனைத்து ஆடுகளும் ஓடும் நிலை ஏற்படும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்க | இபிஎஸ் தலைமையில் எந்த கூட்டணியும் அமையாது-ஓபிஎஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *