Tamil Nadu Ministry Meeting On January 23 Important Facts | மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

360309 Mk Stalin.jpg

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (2024, ஜனவரி 23) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் இன்னும் சில நாட்களில் (ஜனவரி 28) வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை இன்று கூடி முக்கிய முடிவுகளை எடுத்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்திடும் வகையில் மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில மகளிர் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி மகளிருக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் மகளிர் கொள்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்பில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாநில மகளிர் கொள்கை உருவாக்கவும், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல், மீண்டும் சனதான தர்மம் -வானதி சீனிவாசன்

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்க மாநில மகளிர் கொள்கை வழிவகை செய்கிறது. 19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு ‘கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா’ திட்டம் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க | Udyogini: பெண்களுக்கான சிறப்பு திட்டம்! வட்டியில்லாத கடனை பெற முடியும்!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் கூட உள்ள நிலையில், அது தொடர்பான பல்வேறு விஷயங்கள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சர், தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதித்து முடிவெடுப்பார். 

முன்னதாக, உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ரூ. 96,75,49,000 செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கலையரங்கம், விருந்தினர் மாளிகை, உடற்பயிற்சிக்கூடம், அணுகுசாலை, விடுதிகள், பணிமனைகள், கழிவறை தொகுதிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார். 

மேலும் படிக்க | 10 ஆண்டு கால நரேந்திர மோடியின் ஆட்சியில் புனருத்தாரணம் பெற்ற புராதன ஆலயங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *