DMK youth wing to expose BJP as Hindu’s enemy | இந்துக்களின் எதிரி பாஜக, நீட் மற்றும் ஆளுநர் பதவி வேண்டாம்: திமுக இளைஞரணி தீர்மானம்

359577 Udhayanidhi.jpg

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க இளைஞரணியின் மாநாட்டுத் தீப ஒளி சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பிறகு மாநாடு திடலில் இந்த தீப ஒளி சுடர் ஏற்றப்பட்டது. 

மேலும் படிக்க | திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய கலைஞர் கருணாநிதி..!

இதனைத் தொடர்ந்து திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக கொடியை ஏற்றி வைத்து திமுக இளைஞரணி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிகழவில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து மேடையில் முதலமைச்சர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்னை உருவாக்கிய அணி திமுக இளைஞரணி என கூறினார்.

பிறகு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் காலை உணவு திட்டம், நான் முதல்வன் – புதுமைப் பெண் திட்டங்கள், மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்கள், நிதி நெருக்கடியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதற்கு தீர்மானத்தின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது, குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம், மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்ற வேண்டும், முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக வேண்டும், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம், கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிட வேண்டும், அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம், நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம், கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிட வேண்டும், இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் படிக்க | ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி – புகைப்படங்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *