கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: அடுக்கடுக்கான புகார்கள்… அரசின் வசம் உள்ள திட்டங்கள் என்னென்ன? | Kilambakkam Bus Stand: Continues Complaints, what solution does the government has?

Gridart 20231230 165910084.jpg

ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு செல்வதற்கு ஒரே ஆப்ஷனாக பேருந்துகள் மட்டுமே இருந்துவந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரயில் நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) தரப்பில், கிளாம்பாக்கம் ரயில்வே நிலையம் அமைக்கும் திட்டத்துக்கான முதற்கட்ட தொகையாக ரூ.20 கோடியை தெற்கு ரயில்வே வாரியத்திற்கு ஒதுக்கியிருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே வாரியத்திற்கு சி.எம்.டி.ஏ கோரிக்கை விடுத்திருக்கிறது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்

இந்த திட்டத்தின் மூலம், தாம்பரம் – செங்கல்பட்டு வழித் தடத்தில், வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிரே ரயில் நிலையம் அமைக்கப்படும். சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இதற்கான ஒப்பந்தம் முடிக்கப்பட்டு, ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் அசுர வேகத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றன. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 3 நடைமேடைகளுடன், மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரயில் நிலைய கட்டடம், மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படவிருக்கின்றன. இந்தப் பணிகள், 8 மாதங்களுக்குள், அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *