Exclusive: மணிப்பூரில் இதுதான் ரியல் பிரச்சனை.. இரோம் சர்மிளா சொன்ன கசப்பான உண்மை | Manipur Incident : Amitshah visit didn’t bring back peace to Manipur- Irom Sharmila interview

Home 1200 1690313910.jpg

Chennai

oi-Velmurugan P

Google Oneindia Tamil News

சென்னை: மணிப்பூர் சம்பவம் குறித்து ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா, மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி வேண்டுமென்றே அறியாமையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ இணையத்தில் நேற்று முன் தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா , தற்போது நடைபெற்ற நிகழ்வுகள் மிகவும் மோசமானது, உண்மையில் மனிதாபிமானமற்றது. மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியை கடைபிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூரில் இயல்புநிலை திரும்புவது பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்றும், மணிப்பூர் மாநில அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

இதுபற்றி ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்தார். அப்போத நெறியாளர் அவரிடம், மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்ட போது மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணான நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு இரோம் சர்மிளா கூறும் போது, இந்த நிகழ்வு மிக மோசமானது.

மணிப்பூர் மக்களை சுற்றிலும் எப்போதும் போலீசார், ராணுவத்தினர் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வு மிக மோசமானது. மத்தியிலும் ஆளும் பாஜக அரசும்,மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் இந்த விவகாரத்தை முறையாக கையாளவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி வேண்டுமென்றே அறியாமையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறினார்.

Manipur Incident : Amitshah visit didnt bring back peace to Manipur- Irom Sharmila Activist

தொடர்ந்து நெறியாளர் பேசும் போது, மணிப்பூரில் என்ன மாதிரியான பிரச்சனை இருக்கிறது. பிரச்சனை எங்கு ஆரம்பம் ஆனது. இந்த பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்று கேட்டார்.இதற்கு பதில் அளித்த இரோம் சர்மிளா, உண்மையில் இப்போது அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இப்போது அங்கு குக்கி மற்றும் மற்ற இனத்தினரிடையே என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

Manipur Incident : Amitshah visit didnt bring back peace to Manipur- Irom Sharmila Activist

ஆனால் மணிப்பூரில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரியஅளவில் உயர்ந்து உள்ளது. இதனிடையே வேலை இல்லாத சூழலில் இளைஞர்கள் போதைப்பொருள் கடத்துவது அதிகரித்துள்ளது. மியான்மர் எல்லையில் மணிப்பூர் இருப்பதால் அதிகம்பேர் இதுபோன்று போதை பொருட்களை கடத்துவதில் இறங்கினார்கள் என்று கூறினார்.

மணிப்பூர் மக்களின் வாழ்க்கை முறை எப்படி, அவர்கள் வாழ்கிறார்கள், அவர்களின் பழக்கம் எப்படி என்பது உள்ளிட்ட பின்னணி குறித்து விரிவாக பேசிய இரோம் சர்மிளா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை அங்கு அமைதியை ஏற்படுத்தவில்லை என்று கூறினார். இரோம் சர்மிளா பேசிய முழு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் பாருங்கள் .

English summary

AIADMK pleads in the madras High Court seeking an order to investigate the irregularities in the construction of the new secretariat.

Story first published: Wednesday, July 26, 2023, 1:12 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *