நொய்டாவில் திக் திக்.. நின்று கொண்டிருந்த கார்களை அப்படியே மூழ்கடித்த வெள்ளம்.. பரபர வீடியோ | water level increase in UP Hindon River, area near Ecotech 3 got submerged

Screenshot81016 1690291403.jpg

Lucknow

oi-Mani Singh S

Google Oneindia Tamil News

லக்னோ: வடமாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதில், யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில், நொய்டாவில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழையால் தலைநகர் டெல்லி தத்தளித்தது. யமுனை நதியிலும் உபரி நீர் அதிக அளவு திறந்து விடப்பட்டது.

water level increase in UP Hindon River, area near Ecotech 3 got submerged

இதனால் யமுனை நதியில் அபாய அளவை தாண்டி நீர் ஓடியது. இதனால், டெல்லியில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மழையின் அளவு குறைந்ததால் டெல்லியில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கடந்த ஜூலை 18 ஆம் தேதிக்கு பிறகு யமுனை நதியில் நீர்மட்ட அபாய அளவுக்கு கீழ் வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

அதிகனமழையால் நிரம்பும் பில்லூர் அணை.. கோவை பவானி ஆற்றில் பெருகும் வெள்ளம்.. எச்சரிக்கும் கலெக்டர் அதிகனமழையால் நிரம்பும் பில்லூர் அணை.. கோவை பவானி ஆற்றில் பெருகும் வெள்ளம்.. எச்சரிக்கும் கலெக்டர்

அதேபோல், நொய்டா, என்.சி.ஆர் பகுதிகளிலும் இன்று அதிகாலை லேசானது முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இதனால், இன்று மதிய வேளையில் யமுனை ஆற்றில் நீர் மட்டம் அபாய அளவை விட சற்று அதிகரித்தது. அதாவது 205.33 மீட்டர் என்ற அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில், யமுனை நதியின் துணை ஆறுகளில் ஒன்றான ஹிண்டன்ஆற்றில் இன்று பிற்பகல் திடீரென நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது.

இந்த வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதிகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது. இதையடுத்து மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்பால் அங்கு கார் ஷோருமில் நின்ற கார்களும் மொத்தமாக சிக்கின. அதாவது, நொய்டா எக்கோடெக் என்ற புறநகர் பகுதியில் கார் ஷோரூம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தம் புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கார் முழுக்க நீரில் மூழ்கி மேல் பகுதி மட்டுமே கண்ணில் பட்டன. சுமார் 400 கார்கள் வரை வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. கார்கள் மூழ்கியபடி நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்ஙகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. கார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், கார் ஷோரூம் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

English summary

Southwest Monsoon is falling in northern states. In this, the water level in the Hindon river, a tributary of the Yamuna river, has risen dramatically. As a result of which the coastal areas are flooded, many cars have been seen floating in the flood in Noida.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *