`இந்தியாவை நிராகரிக்கும்படி நாங்கள் ஒருபோதும் மாலத்தீவிடம் கேட்கவில்லை!’ – சீன அரசு நாளிதழ் | india maldives controversy never asked them to reject-india china on maldives ministers remarks

Whatsapp Image 2024 01 09 At 22 38 39.jpeg

சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ், இந்தியா-மாலத்தீவு இடையேயான சமீபத்திய `புகைச்சல்” தொடர்பாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், `புது டெல்லி (இந்தியா) இன்னும் திறந்த மனதோடு செயல்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு இரண்டு நாள்கள் பயணமாகச் சென்றார். அங்கு தன்னுடைய அனுபவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் மாலத்தீவின் அமைச்சர்கள், பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதனால் மாலத்தீவு அரசு, அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

மோடி - மாலத்தீவு

மோடி – மாலத்தீவு

இந்த நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, அரசுமுறைப் பயணமாகச் சீனாவிற்குச் சென்றிருந்தார். இது தொடர்பாகச் சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதில், “மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு மற்றும் உறவை, சீனா மதிக்கிறது. புது டெல்லியுடன் நல்ல உறவைப் பேணுவதற்கான முக்கியத்துவத்தை, சீனா முழுமையாக அறிந்திருக்கிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக, புது டெல்லியை நிராகரிக்குமாறு பெய்ஜிங் ஒருபோதும், மாலத்தீவிடம் கேட்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *