வாகன ஓட்டிகளே உடனே செய்யுங்க.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போட்ட அதிரடி உத்தரவு | Chennai Corporation Commissioner Radhakrishnan IAS Important Order For Vehicles Remove

Newproject 2023 07 25t205338 897 1690298622.jpg

Chennai

oi-Velmurugan P

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. மின்சார கேபிள்கள் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. இதுமட்டுமின்றி சாலை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Chennai Corporation Commissioner Radhakrishnan IAS Important Order For Vehicles Remove

இதனால் சென்னையில் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம்எனில் வாகனங்கள் சாலையோரங்களில் கண்ட இடங்களில் நிறுத்தப்படுவதாலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. பல நாட்களாக கேட்பாராற்று சென்னையில் ஏராளமான வாகனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவும் சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்த சூழலில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சாலைகள் தோண்டும் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்தும் பணிகளை செய்துவரும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை இன்று நடத்தினார்.

அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசும் போது, “சென்னை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை குழாய் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் குடிநீர் குழாய் பதித்தல் பணிகள் நடக்கிறது. மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மின்துறை பணிகளும் நடக்கிறது. இதுதவிர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இப்படி பல்வேறு பணிகள் நடைபெறுவதால் சாலை தோண்டப்படுகிறது. இப்படி சாலைகள் தோண்டும் போது, அந்த குறிப்பிட்ட பணிகள் முடிந்தால், உடனடியாக சாலை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சாலை தோண்டும் பணிகளை அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்ள வேண்டாம். மாநகராட்சியிடம் உரிய அனுமதியைப் பெற்றவுடன் தான் சாலைகளை தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகளை தோண்டும் போதும் அனுமதி பெற்றுதான் செய்ய வேண்டும். சாலைகளை தோண்டுவதால் ஏற்படும் பள்ளங்களை உடனே சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசத்தும் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.. நாட்டிலேயே முதன்முறையாக.. தமிழகத்தில் அசத்தும் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்.. நாட்டிலேயே முதன்முறையாக.. தமிழகத்தில்

அத்துடன் சென்னையில் சாலைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து தொடங்கப்பட்ட நாள் மற்றும் முடிவுறும் நாள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளை அமைத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள். சாலைகளை தோண்டும் பணிகள் மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்டிப்பாக பின்பற்றுவதுடன், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும்” என ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறினார்.

வாகனம் பறிமுதல்: இதனிடையே கூட்டத்தில் முக்கியமான இன்னொரு விஷயம் குறித்தும் பேசினார். சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் பிரச்சனை. கேட்பாரற்று வாகனங்கள் நீண்ட நாட்களாக இருப்பது பற்றி பேசினார். இதுபற்றி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறும் போது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள். அது போன்ற வாகனங்களை கைப்பற்ற வேண்டும். மேலும், கேட்பாரற்று நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வாகனங்களை அகற்றி போக்குரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றார்.

English summary

Action should be taken to remove vehicles that have not been in use for a long time in Chennai Municipal Corporation areas. The Corporation Commissioner has ordered that action should be taken against those who park their vehicles arbitrarily and the vehicles should be confiscated.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *