நிபந்தனை ஜாமீனுக்கு Live Location ஷேரிங் சரியா? – உயர் நீதிமன்ற உத்தரவை ஆராயும் உச்ச நீதிமன்றம்! Can accused be forced to share location? Supreme Court to examine

Cf75c0c6 00ce 4603 Bbf3 B7be6d33cecf.jpg

ஆனால், புராரியா தான் இருக்கும் இடம் குறித்த லைவ் லொகேஷனை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி அபய் எஸ்.ஓகா, நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்துவருகிறது

உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்!

ஒருவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான Google Pin லைவ் லொகேஷனை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்பது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது, அனைவருக்குமான அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனப் பிரிவு 21 உறுதிசெய்திருக்கிறது. அந்த உரிமையை மீறும் வகையில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதாக கருத்து எழுந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டப்படியானதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் ஆராயவிருக்கிறது. லைவ் லொகேஷனை அனுப்ப வேண்டும் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்று கருதப்படுவதால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவு ரத்துசெய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள். அல்லது, வழக்கின் கடுமை கருதி, இதுபோன்ற நிபந்தனைகள் தேவைதான் என்ற முடிவுக்கும் உச்ச நீதிமன்றம் வரலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *