திடீரென மாயமான வெளியுறவுத்துறை அமைச்சர்; சத்தமில்லாமல் பதவிநீக்கம் செய்த சீன அரசு… என்ன நடக்கிறது? | ‘Missing’ Chinese foreign minister Qin Gang removed from office

Qin Gang .jpg

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடந்து வருகிறது. ஜி ஜின்பிங்கின் அமைச்சரவையில் குயின் கேங் என்பவர் (Qin Gang) வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் கருதப்படுபவர். இந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் ஜூன் 25-ம் தேதி அன்று ரஷ்யாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

சீன அமைச்சர் குயின் கேங்

சீன அமைச்சர் குயின் கேங்

அதற்குப் பிறகு, கடந்த ஒரு மாதமாக குயின் கேங் எந்த அரசு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. மக்களின் பார்வையிலும் படவில்லை. காணாமல்போனவர் குறித்த எந்த அறிவிப்பும், தகவலும் இல்லாமல் இருக்கும் நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்து, சீனாவின் நாடாளுமன்ற உறுப்பினரான வாங் யி-யை புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக சீன அரசு நியமித்திருக்கிறது. இந்தத் தகவலை சீனாவின் பிரபல செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *