அலர்ட்.. சட்டென மாறிய வானிலை! மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை! கனமழை பட்டியலில் உங்க மாவட்டம் இருக்கா | Today Tamilnadu 7 districts will gets heavy rain and weather officials alert to Fishermen

Home 1690277488.jpg

Weather

oi-Nantha Kumar R

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை கொட்டிதீர்க்கும் எனக்கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று முதல் வரும் 31ம் தேதி வரையிலான தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

Today Tamilnadu 7 districts will gets heavy rain and weather officials alert to Fishermen

நேற்று மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று காலை ஆழ்தந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது.

இது ஒருபுறம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடும் உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மாவ்டடங்களின் மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வங்கக்கடலில் இன்று மற்றும் நாளை (ஜூலை 26) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டி குமரிக்கடல் பகுதிகள் ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலம் வீசும்.

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றுமு் அதனையொட்டி தென்மேற்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலம் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Today Tamilnadu 7 districts will gets heavy rain and weather officials alert to Fishermen

அதன்பிறகு 27, 28, 29 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டி குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளி்ல சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டி தென்மேற்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அரபிக்கடல் பகுதியை பொறுத்தமட்டில் இன்று முதல் 27 ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரளா கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றுமு் அதனையொட்டி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

குட்நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. எவ்வளவு கனஅடி தெரியுமா? குட்நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு.. எவ்வளவு கனஅடி தெரியுமா?

அதன்பிறகு 28, 29 தேதிகளில் கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்றும் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு நாளை மறுநாள் (ஜூலை 27) முதல் 31ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த 24 மணிநேரத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸையொட்டியே இருக்கும்.

மேலும் அடுத்த 48 மணிநேரத்தை எடுத்து கொண்டால் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளிலும் இடி மின்னலடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-22 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary

In Tamil Nadu today, heavy rain will fall in 7 districts including Coimbatore, Tiruvallur, Theni, Nilgiris, Ranipet, Dindigul and the Chennai Meteorological Department has issued a warning to the fishermen and has given important information.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *