“மழைநீர் கடலில் கலக்கக்கூடாது’’ பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியது சரியா? | “Rainwater should not mix in the sea” is it right when Ramadoss spoke?

C3cdc449 B244 4cb1 8a61 F25e1a0b0fe1.jpg

இதனால் மீன்கள் அதிகமாக முட்டையிட இந்த பகுதி உதவி செய்கிறது. அதேபோல் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடிக்கும் சிறு மீனவர்களும் இதனால் பயடைவார்கள். ஒருவேளை மழை நீர் கடலில் கலக்கவில்லையெனில் மீன்கள் உற்பத்தி குறையும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

சென்னையில் இருக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றிவிட்டு வடிக்கட்டப்பட்ட மீதமுள்ள அதிக உப்புக் கலந்த நீர் மீண்டும் கடலில்தான் போய் கலக்கிறது இதனால் கடலின் தன்மை இன்னும் அதிகமாக கெட்டுவிடும்.

அதேபோல் சுற்றுசூழலுக்கு வந்தால் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள் சாக்கடை கழிவுகளாவும் குப்பைமேடுகளாகவும் உள்ளன. எனவே இந்த அசுத்த நீர்தான் கடலில் அதிகமாக கலக்கிறது. இதனால் கரையை ஒட்டியுள்ள பகுதி அதிகமாக பாதிக்கப்படும், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் பண்டைக்காலத்தில் ஏரி மற்றும் குளங்களில் மழை நீரை சேமித்து மக்கள் பயன்படுத்தினார்கள். தற்போது முறையான இடைவெளியில் ஏரிகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி நீரை சேமித்து வைத்தால் வருங்காலத்தில் தமிழக மக்கள் தேவையான நீரை பெறுவார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *