சென்னை, கோவை என மொத்தம் 9 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கு! வானிலை மையம் | 9 districts including Chennai, Coimbatore will get rain for next 3 hours says meteorological department

Rain7 1689422127.jpg

Chennai

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, கோவை உள்ளிட்ட மொத்தம் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவை வாட்டி வதக்கி வந்த கோடைக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெப்பம் ஜூலை முதல் இரண்டு வாரங்கள் வரையிலும் கூட பல இடங்களில் இருந்தது.

இதனால் அப்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பல இடங்களில் இப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது.

 9 districts including Chennai, Coimbatore will get rain for next 3 hours says meteorological department

வட மாநிலங்கள்: இப்போது வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. தலைநகர் டெல்லி, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. டெல்லியில் பல முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. டெல்லியை விட ஹிமாச்சல பிரதேசத்தின் நிலை ரொம்பவே மோசம். அங்கே பல இடங்களில் மண் சரிவும் கூட ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தளவுக்கு மோசமான மழை எங்கும் இல்லை என்பது நல்ல செய்தி.. அதேநேரம் தமிழ்நாட்டில் இப்போது பல இடங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், கணிசமான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது,

9 மாவட்டங்களில் மழை இருக்கு: அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கொங்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதன் தினசரி செய்திக்குறிப்பில், இன்று (ஜூலை 15), நாளை (ஜூலை 16) தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல வரும் ஜூலை 17 முதல் 21 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் வடியாத வெள்ளம்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம் டெல்லியில் வடியாத வெள்ளம்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.

English summary

Total of 9 districts will recieve good rain for next 3 hours: Chennai, KTC region will get decent rain for upcoming few hours.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *