தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்; டெல்லி பேச்சுவார்த்தை தோல்வி? – ஒடிசாவில் தனித்துப் போட்டியிடும் பாஜக?

L7a3c4co Naveen Patnaik Pm Modi 625x300 09 March 24.webp.png

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவேகத்தில் தயாராகி வருகிறது. ஏற்கனவே பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. பா.ஜ.க தனது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தை பெரும்பாலும் டெல்லியில் நடக்கிறது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. எனவே இதில் பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக மாநில பா.ஜ.க தலைவர்கள் மன்மோகன் சமல் தலைமையில் டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கடந்த மூன்று நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

மன்மோகன்

பிஜு ஜனதா தள கட்சி தலைவர்கள் வி.கே.பாண்டியன் மற்றும் பிரணாப் பிரகாஷ் தாஸ் ஆகியோர் வியாழக்கிழமை அவசரமாக தனி விமானத்தில் டெல்லி சென்றனர். அவர்கள் நேற்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசினர். இப்பேச்சுவார்த்தையில் சட்டமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் மொத்தமுள்ள 147 தொகுதியில் 100 தொகுதியில் போட்டியிடும் என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளவில்லை. இதே போன்று மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதியில் பா.ஜ.க 14 தொகுதிகளை கேட்டது. இதனை பிஜு ஜனதா தளம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு பூரி மற்றும் புவனேஸ்வர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் இரு கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் டெல்லியில் முகாமிட்டு இருந்த இரு கட்சி தலைவர்களும் நேற்றே ஒடிசா வந்துவிட்டனர்.

பா.ஜ.க தலைவர்கள் நேற்று இரவு மாநில தலைவர் மன்மோகன் வீட்டில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாநில பா.ஜ.க தலைவர் மன்மோகன் கூறுகையில், ”தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி தலைவர்களுடன் பேசத்தான் டெல்லி சென்று இருந்தோம். கூட்டணி குறித்து பேசவில்லை. எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசவில்லை. வரும் இரண்டு தேர்தலிலும் பா.ஜ.க தனது சொந்த செல்வாக்கில் தனித்து போட்டியிடும்” என்று தெரிவித்தார்.

பாண்டியனுடன் நவீன் பட்நாயக்

மாநிலத்தில் சில பா.ஜ.க தலைவர்கள் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் மன்மோகன் தனித்து போட்டியிடவேண்டும் என்று விரும்புகிறார். கடைசியாக நடந்த தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 8 தொகுதியிலும், பிஜு ஜனதா தளம் 12 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு பிஜு ஜனதா தளமும், பா.ஜ.க வும் 1998-2009ம் ஆண்டு வரை இரு கட்சிகளும் கூட்டணியில் தான் இருந்தது. இரு கட்சிகளும் தொகுதிகளை 4:3 என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டு இரண்டு மக்களவை தேர்தல் மற்றும் மூன்று சட்டமன்ற தேர்தல்களை சந்தித்தனர். இதில் மக்கள் பிஜு ஜனதா தளத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் நவீன் பட்நாயக் தனது கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பினார்.

2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வின் சட்டமன்ற தொகுதிகளை 63லிருந்து 40 ஆகவும், மக்களவை தொகுதிகளை 9லிருந்து 6ஆகவும் குறைக்க நவீன் பட்நாயக் விரும்பினார். இதனால் இரு கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இரு கட்சிகளும் தனித்து தேர்தலை சந்தித்தன. கடந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் எதிர்பார்த்தபடி தேர்தல் முடிவுகள் அமையவில்லை. பா.ஜ.க 8 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எனவேதான் இம்முறை அதிகப்படியான தொகுதிகளை பா.ஜ.க எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *