பாலாறு: `நட்புக்கு ஏற்றதல்ல; கூட்டாச்சிக்கு எதிரானது..!’ – ஆந்திர அரசை எச்சரிக்கும் துரைமுருகன் | palar river issue – tamil nadu minister durai murugan warns andhra state govt

Whatsapp Image 2024 02 27 At 3 29 08 Pm.jpeg

இவ்வாறு இருக்கையில், ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணை கட்ட முயல்வது 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சி. மேலும், இதற்கு முன்பு சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்திலும், ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயன்றபோது, அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10-02-2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இருமாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018-ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணையும் நடக்கவிருக்கிறது.

அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

இதனிடையே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்திருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு, பாலாற்றில் ஒரு புதிய அணை கட்ட முயல்வதும், அதற்காக நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும், கூட்டாச்சிக்கும் எதிரானது. ஆகையால், ஆந்திர அரசு இருமாநிலங்களின் நலன்கருதி இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ளக் கூடாது’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *