Paytm: `1,000 வங்கிக் கணக்குகளுக்கு ஒரே பான் கார்டு!’ – ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? | Money Laundering Concerns And KYC Non-Compliance Led To Ban On Paytm Bank By RBI

137552 Thumb.jpg

அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி அமலாக்கப் பிரிவு, உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்பியுள்ளது. பேடிஎம்-மில் சட்டவிரோத செயல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தும் என்று வருவாய்த்துறை செயலாளர் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

பேடிஎம் நிறுவனத்திற்கும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனை குறித்த விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றும், பேடிஎம் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான `ஒன்-97 கம்யூனிகேசன்’ நிறுவனத்திற்கும் இடையிலான இணைப்புகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டுபிடித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

எனவேதான் உடனடியாக பணப் பரிவர்த்தனைகளை நிறுத்தும்படி பேடிஎம் வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம் வரும் 29-ம் தேதி வரை பேடிஎம் சேவைகள் பாதிக்கப்படாது என்றும், வேறு ஒரு வங்கியுடன் இணைப்பு ஏற்படுத்தி சேவை வழங்கப்படும் என்றும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, பேடிஎம் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கும் நோட்டீஸ் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் இரண்டு நாள்களில் 36 சதவிகிதம் அளவுக்குச் சரிந்துவிட்டது. அதாவது 2 பில்லியன் டாலர் அளவுக்கு கம்பெனியின் மதிப்பு குறைந்து இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *