‘ஆளுநர் ரவி Vs தமிழக அரசு’ – தொடரும் `சட்டசபை’ மோதல்கள் | Governor Ravi Vs Tamil Nadu Govt in TN assembly continues

6202f4d58e774.jpg

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜ் பவன் வட்டாரங்கள், “தமிழக அரசு அறிக்கை தயாரித்து அனுப்பியதும் ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றார். அங்கு தனது தரப்பு விளக்கத்தை கூறினார். அப்போது ஆளுநர் தரப்பில் “சில தகவல்களை படிக்க முடியாது. அதை தவிர்த்துவிட்டு படித்தால் கடந்த முறையை போல பிரச்னை வரும். எனவே முழுமையாக படிக்காமல் தவிர்க்கலாம்” என சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படியே ஆளுநர் படிக்கவில்லை” என்றன.

இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாகி இருக்கிறது. முன்னதாக கடந்த ஜனவரி 25-ம் தேதி கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. அப்போது உரையின் 62 பக்க உரையைத் தவிர்த்துவிட்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார் ஆளுநர் ஆரிப் முகமது கான். அப்போது அவர் மொத்தமே 4 நிமிடங்கள்தான் அவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “சட்டசபையில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் தொடர் மோதல் ஏற்படுகிறது. கவர்னர் அவையின் கண்ணியத்தை கெடுத்தது மட்டும் இல்லாமல் ஆளுநர் பதவிக்கான கண்ணியத்தையும் கெடுத்து விட்டார். மற்றவர்கள் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் அவரே மதிக்காமல் செல்கிறார். அவருக்கு உரையில் எந்த பங்களிப்பும் கிடையாது. அதில் தவறு இருந்தால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவார்கள். நான்கு வரியை மட்டும் படித்துவிட்டு கருத்து கூறுவதற்கு உரிமை இல்லை. எனவே தான் அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து எடுத்துவிட்டார்கள். மீண்டும் அதை பதிவிட்டது உரிமை மீறல் செயல். அரசு சுமூகமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும் தொடர் மோதல் மனப்பான்மையை கடைபிடிக்கிறார் ஆளுநர்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *