Former TN CM O Panneerselvam Opposing Uniform Civil Code Read The Reason Here Latest News In Tamil | பாஜகவின் சட்டத்தை கடுமையாக எதிர்க்கும் OPS – அவர் சொல்லும் காரணத்தை பாருங்க!

365780 Feb10005.png

O Panneerselvam Opposing Uniform Civil Code: சிவகங்கையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப். 9) ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்ச்செல்வம், உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை நுழைய விட மாட்டோம் என பேட்டியளித்தார்.

சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது, “திமுக பொருப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை.

‘என் தொண்டர்கள் கொடியை பயன்படுத்தலாம்’

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஒரு சில விதிமுறைகளை ஏற்கவில்லை என ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசித்து தொகுதிகள் குறித்து அறிவிப்போம். அதிமுகவின் கொடி, சின்னத்தை நான் பயன்படுத்தக்கூடாது என்றே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தொண்டர்களுக்கு அல்ல.

மேலும் படிக்க | அதிமுக பாஜக கூட்டணி முறிவு: எடப்பாடி பழனிசாமி தான் உண்மையை சொல்லணும் – அண்ணாமலை

இபிஎஸின் உட்சபட்ச துரோகம்

கொடியை பயன்படுத்த தடைவிதிக்கலாம். ஆனால் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம். அதனை மாற்ற முடியாது. எந்த தேர்தல் வந்தாலும் எங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும். எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் பாஜக ஆதரவோடு ஆட்சி செய்துவிட்டு ஒரே வாரத்தில் கூட்டணியை முறித்தது துரோகம். கூட்டணியை முறித்ததற்கு என்ன காரணம் என கூற வேண்டும். ஒவ்வொருவருக்காக துரோகம் இழைத்துவரும் எடப்பாடி பழனிச்சாமியின் உட்சபட்ச துரோகம் இது. 

மதவாத பாஜகவுடன் எம்ஜிஆர் – ஜெயலலிதா நிராகரித்த கூட்டணியை தாங்கள் ஏற்றிருப்பது குறித்த கேள்விக்கு, “அரசியலில் எதுவும் நடக்கலாம். கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுக்கு பின்னர் தெரியும். அதனால்தான் பிரிந்தவர்கள் ஒன்று சேரவேண்டும் என கூறிவருகிறோம். எடப்பாடி பழனிச்சாமி கட்சியை சின்னாபின்னமாக்கிவிட்டார்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக விரைவில் மலரும். உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிக்கும் பொது சிவில் சட்டத்தை நுழைய விட மாட்டோம்” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இருக்கும் முதல் மாநிலமாகும் அதுவேயாகும். இந்த சட்டத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், அதில் பரபரப்பை ஏற்படுத்திய அம்சம் என்றால் உறவுமுறையில் உள்ளவர்கள் திருமண பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்பதுதான். இதைதான் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு வழக்கு: 20க்கும் மேலான இடங்களில் என்ஐஏ சோதனை – சிக்கியவர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *