`உட்கட்சி பூசல், பனிப்போர்’ – குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி கடமுடா… அறிவாலய ஏரியா ரவுண்ட்அப்!| what happened in the Kanyakumari thoothukudi Madurai Theni dmk party executive meeting

Kumari Dmk.jpg

ரணகளமான குமரி, தூத்துக்குடி!

தூத்துக்குடி இரண்டு மாவட்டச் செயலர்களான கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் அமைச்சர்கள். அதோடு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கீதா ஜீவனின் சகோதரர் ஆவர். தூத்துக்குடியில் அக்கா, தம்பிக்கிடையே ஒரு பனிப்போர் நிகழ்கிறது. அவர்களுக்குள் நடக்கும் பிரச்னை குறித்துப் பேசி சமாதானம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, இப்போதுதான் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டிருந்தபோதிலும் மக்கள் வெள்ள பாதிப்புகளிலிருந்து இருந்து மீண்டு வருவதற்கான உதவிகளைச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தூத்துக்குடியில் அமைச்சர் அனிதாவும் அங்குள்ள சில சேர்மேன்களுக்கும் மனஸ்தாபம் நிலவுகிறது.

ஆலோசனைக் கூட்டம் - கன்னியாகுமரி

ஆலோசனைக் கூட்டம் – கன்னியாகுமரி

அதனையும் சம்மந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசி நிவர்த்தி செய்திருக்கிறார்கள். கன்னியாகுமரியைப் பொறுத்தவரை, மேயருக்கும் அங்குள்ள அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு நீடித்துக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரியில் பலமாதங்களுக்கு முன்பாகவே பாஜக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது. அந்த மாவட்டத்தில் திமுக தேர்தல் பணியில் பின்தங்கி இருப்பதாகவும், பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று சொல்லி அமைச்சர் மனோ தங்கராஜுக்குக் கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கும் தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்திலுமே குழுவில் உள்ளவர்களின் வார்த்தைகள் கண்டிக்கும் அளவுக்கு ரணகளமாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *