ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா! |Former Mumbai Congress president Milind Deora joined Shiv Sena led by Eknath Shinde

Milind Deora Fb D.webp.png

மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான செய்தி வெளியானது. இதில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தெற்கு மும்பை தொகுதியை சிவசேனாவிற்கு விட்டுகொடுக்க காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு தென்மும்பை தொகுதியில் சிவசேனா போட்டியிடும் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத்தும் அறிவித்தார். அத்தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் அர்விந்த் சாவந்தும் அத்தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு மிலிந்த் தியோரா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். வழக்கமாக மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிடுவதுதான் வழக்கம். ஆனால் அத்தொகுதி கிடைக்காது என்று கருதி திடீரென மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னாள் எம்.பி.யான மிலிந்த் தியோரா சிவசேனாவில் சேர்ந்திருந்தாலும் அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட தெற்கு மும்பை தொகுதி கிடைப்பது சந்தேகம் என்று பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது.

தெற்கு மும்பை தொகுதிக்கு பா.ஜ.க. குறிவைத்து இருக்கிறது. எனவே முன்னாள் மத்திய அமைச்சரான மிலிந்த் தியோராவிற்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி கொடுப்பதாக ஷிண்டே தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே உடைத்துவிட்டன. எஞ்சி இருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தலைவர்களும் அதில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளது அக்கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *