Senthil Balaji Taken On Custody By Enforcement Directorate From Puzhal Jail See What Next | தாடியுடன் செந்தில்பாலாஜி… சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்த அதிகாரிகள் – அடுத்தது என்ன?

310030 Aug70010.png

Minister Senthil Balaji In ED Custody: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்திருந்தது.

5 நாள்கள் காவல்

இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம், ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்து இன்று காலை தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிபதி அல்லி உத்தரவு

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி சொத்துக்கள் முடக்கம்

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

காரில் அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர்

அந்த வகையில், நீதிபதி அல்லி அளித்த உத்தரவை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று முதலே விசாரணையில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு விரைந்தனர். தொடர்ந்து, அவரின் மருத்துவமனை சோதனை மற்றும் இரவு உணவுக்கு பின் அவரை புழல் சிறையில் இருந்து விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துசென்றனர்.

சாஸ்திரி பவனில் விசாரணை

அவரை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை காரில் சிறையில் இருந்து அழைத்துச்சென்றனர். காரில் பின் இருக்கையில் செந்தில் பாலாஜி அமரவைக்கப்பட்டு, இருபக்கமும் அதிகாரிகள் இருக்கும் வகையில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னையில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, மூன்றாவது தளத்தில் விசாரணை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வழக்கறிஞரும் உடன் இருப்பாரா?

மேலும், அமைச்சரிடம் விசாரணை செய்யும்போது, அவரின் வழக்கறிஞர் இருக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அனுமதி அளிக்கப்பட்டாலும், அவர் விசாரணை அதிகாரி – செந்தில் பாலாஜி ஆகியோரிடம் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் அதாவது அதிகாரிகள் கேட்கும் கேள்வி, அமைச்சர் சொல்லும் பதில் ஆகியவை கேட்காத தூரத்தில் வழக்கறிஞர் அமரவைக்கப்படுவதே நடைமுறை எனவும் கூறப்படுகிறது. 

வீடியோ பதிவு

அதிகாரிகளின் விசாரணை ஒரு நொடி விடுபடாமல், முழுமையாக வீடியோ எடுக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், அடுத்த 5 நாள்கள் அவரை முழுவதுமாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தே விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுவார் என தெரிகிறது. அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க | கோவை: அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு..! சிக்கிய ஆவணங்கள் என்னென்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *