Uncategorized

எடப்பாடி ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்கள் அழிப்பு.. டிடிவி தினகரன் பகீர் தகவல் | TTV Dinakaran says about Kodanad Estate murder and robbery

Home 1689415241.jpg

Chennai

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மதுரையில் பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டவர்களும், கட்சியின் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கட்சியில் சேருபவர்களும் மட்டுமே கட்சி உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 TTV Dinakaran says about Kodanad Estate murder and robbery

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அவரை கட்சியில் சேர்ப்பார்கள் என்றுதான் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான் டிடிவி தினகரன் , எனக்கும் சசிகலாவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மன்னிப்புக் கடிதம் கொடுக்கும் இடத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர்தான் உள்ளனர்.

என்னிடம், சசிகலா, ஓபிஎஸ்ஸிடம் அவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். DMK Files 2 ஐ ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றாலும் தனித்து போட்டியிடுவதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் கொடநாடு சம்பவம் நடந்தது.

அண்ணாமலை ஆடு மேய்க்கணும்! எடப்பாடி வெல்லமண்டி நடத்தணும்! வானதி கூடை பின்னணும்! -அனல் கக்கிய ஆ.ராசா! அண்ணாமலை ஆடு மேய்க்கணும்! எடப்பாடி வெல்லமண்டி நடத்தணும்! வானதி கூடை பின்னணும்! -அனல் கக்கிய ஆ.ராசா!

அப்போது கொடநாடு தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும். கொடநாடு சம்பவம் நடந்த போது துணை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடந்த போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு என தெரிவித்துள்ளார்.

தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதை டிடிவி தினகரன் நீண்ட காலமாக சொல்லி வந்தார். அது போல் அண்மையில் டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக இருவரும் சேர்ந்து செயலாற்றுவோம் என தெரிவித்திருந்தனர்.

English summary

AMMK General Secretary TTV Dinakaran says that Kodanad Estate murder and robbery case evidences may be washed away.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *