அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் ஜெயில்.. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் ராகுல் காந்தி! | Rahul gandhi appeals in supreme court against 2 years jail sentence verdict

Screenshot13351 1689422526.jpg

Delhi

oi-Vignesh Selvaraj

Google Oneindia Tamil News

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார். அப்போது மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.

Rahul gandhi appeals in supreme court against 2 years jail sentence verdict

மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், கடந்த மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ராகுல் காந்தி. கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றம், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

Rahul gandhi appeals in supreme court against 2 years jail sentence verdict

இந்நிலையில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை 7ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவருக்கு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதே என்று தெரிவித்தது.

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டை சூரத் செஷன்ஸ் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

English summary

Congress leader Rahul gandhi appeals in Supreme court against Gujarat high court verdict that confirms 2 years jail sentence in defamation case.

Story first published: Saturday, July 15, 2023, 17:32 [IST]

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *