ஜஸ்ட் பக்கத்திலதான்.. சந்திரயான் 3 வானில் சீறி பாய்ந்தபோது விமானத்திலிருந்த பயணி.. தடதட வீடியோ பதிவு | Passenger records Chandrayaan-3 liftoff from his flight in mid-air

Signal 2023 07 14 144604 002 1689419011.jpeg

Delhi

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 சாட்டிலைட்டை நடுவானில் விமானத்தில் இருந்தபடி ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்த வாவ் காட்சி இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

இஸ்ரோ நிறுவனம் நேற்றைய தினம் சந்திரயான் 3 விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியது. நேற்று மதியம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம்.

 Passenger records Chandrayaan-3 liftoff from a his flight in mid-air

நிலவின் தெற்கே துல்லியமாகத் தரையிறங்க வேண்டும் என்பதே சந்திரயான் 3 திட்டத்தின் நோக்கமாகும். இப்போது சந்திரயான் 3 விண்கலனை இஸ்ரோ ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,

இஸ்ரோ: சந்திரயான் 3 என்பது நிலவுக்கு இந்தியா அனுப்பும் மூன்றாவது சாட்டிலைட் ஆகும். கடந்த 2008இல் இஸ்ரோ முதல்முறையாகச் சந்திரயானை நிலவுக்கு அனுப்பியது. மிகக் குறைந்த செலவில் அனுப்பப்பட்ட இந்த சந்திரயான் திட்டம் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை வியந்து பார்த்தது. நிலவில் பல ஆய்வுகளைச் செய்து இந்த சந்திரயான் பல முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தது.

அதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து சந்திரயான் 2 சாட்டிலைட் கடந்த 2019ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இத்திட்டத்தின் பெரும்பகுதி வெற்றியடைந்தது. ஆர்பிட்டார் அதன் இடத்தில் சரியாக நின்று நிலவைச் சுற்றி வரத் தொடங்கியது. இருப்பினும், தரையிறங்கிய லேண்டார் மட்டும் நிலவில் மோதியது. சந்திரயான் 2 திட்டத்தில் இது மட்டுமே தோல்வியாகக் கருதப்படுகிறது.

ராக்கெட்: இந்தச் சூழலில் தான் 3ஆவது முயற்சியாகச் சந்திரயான் 3 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 3,921 கிலோ எடையுள்ள சந்திரயான் 3 லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் 3 (LM-3) என்ற ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்தியாவின் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் இந்த எல்எம் 3 ராக்கெட்டின் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாகவே இருந்துள்ளது. அதன்படி இதுவும் வெற்றிகரமாகவே இருந்தது.

நேற்று மதியம் சரியாக 2.35 மணிக்குச் சந்திரயான் 3 சாட்டிலைட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது. இதை பார்ப்பதற்காகவே அங்கே மக்கள் பலரும் கூடியிருந்தனர். இதற்கிடையே சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்த போது, அதை விமானத்தில் சென்ற பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

சூப்பர் வீடியோ: அதை அவர் தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார். நீல வானத்தில் சந்திரயான் 3 காற்றைப் பிளந்து சீறிப் பாயும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சென்னையில் இருந்து டாக்கா செல்லும் வழியில் இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நடுவானில் இருந்து சந்திரயான் 3ஐ பார்த்த நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சந்திரயான் -3ஐ நேற்று வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது.. இதுவரை அமெரிக்கா, சீனா, சோவியத் யூனியனின் சாட்டிலைட் மட்டுமே நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் இந்த சந்திரயான் 3இன் மூலம் இணைய உள்ளது.

இந்த விண்கலம் பூமியிலிருந்து சந்திரனுக்குப் பயணம் செய்ய சுமார் ஒரு மாதம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்த சாட்டிலைட் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவில் தரையிறங்கிய பிறகு முழுமையாக அது ஒரு சந்திர நாளில் அது செயல்படும்.. ஒரு சந்திர நாள் என்பது சுமார் 14 பூமி நாட்களுக்குச் சமமாகும்.

English summary

Chandrayaan-3 liftoff from mid air: Chandrayaan-3 begins its journey to moon.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *