கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம்.. இதெல்லாம் வேற லெவல் திட்டம்.. டபுள் ஸ்பீடு எடுத்த தமிழக அரசு.. சூப்பர்ல | 2 Major Instruction by TN Government and Do you know what is Kalaignar Urimaithogai Scheme

Screenshot13326 1689414356.jpg

Chennai

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

சென்னை: 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் பணிகள் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில், 2 விதமான அதிரடிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.. என்ன அவைகள்?

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற, செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.

உரிமைத்தொகை: இந்த தொகையை பெறுவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முக்கியமாக, நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்கு மட்டுமே இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்படியான, விதிமுறைகளைதான் தமிழக அரசு செய்துள்ளது.. இதற்காக, வீடு வீடாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளன. உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

2 Major Instruction by TN Government and Do you know what is Kalaignar Urimaithogai Scheme

குறிப்பாக, இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மற்றொருபுறம் ஆசிரியர்களையும் இதில் ஈடுபடுத்த முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர தாமாக முன்வந்து பணியாற்றும் நபர்களையும், நலச்சங்க நிர்வாகிகளையும் இதில் ஈடுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இவை அனைத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம், மாவட்ட வாரியாக துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

புதிய உத்தரவு: இந்த நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முழுமையாக பெறும் வரை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

காரணம், பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி, புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்களாம்.. அதனால், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இந்த திடீர் கட்டுப்பாட்டினை விதித்துள்ளது. மேலும் பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் அதனை பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்றொரு அதிரடியும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்வதற்கான மொபைல் போன் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாம்.. தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து, தமிழக மின்னாளுமை இயக்கக அதிகாரிகள் சொல்லும்போது, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், “கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம்” என்ற பெயரில், மொபைல் போன் செயலியை உருவாக்கி உள்ளது. இதில், தன்னார்வலர்கள் தங்களது மொபைல் போன் எண் மற்றும் பாஸ்வேர்ட் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். அதற்கு பிறகு, புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என்று 2 வகையான பிரிவுகள் ஸ்கிரீனில் தோன்றும்..

டிரெயினிங்: அதில், புதிய படிவத்தை தேர்வு செய்து, அதில் விண்ணப்பதாரரின், பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த மொபைல் போன் செயலி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடையாது.. ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை குறித்தும் அதில் அறிந்து கொள்ள முடியும். தன்னார்வலர்களுக்கு செயலியை பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது” என்கிறார்கள்.

English summary

2 Major Instruction by TN Government and Do you know what is Kalaignar Urimaithogai Scheme

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *