Uncategorized

ஜோதிடம்

1237212.jpg

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சனி – அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை செய்யக் கூடிய திறமை உடைய சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

மகம்: இந்த மாதம் சுறுசுறுப்பு குறையும். யோகா செய்வதால் அந்த குறைபாடு நீங்கும். மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். டிவி போன்றவைகளில் மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள்.

பூரம்: இந்த மாதம் வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும். ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள். மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும். ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அதன்மூலம் சாதனைகளை துணிந்து செய்வீர்கள். மாணவர்களுக்கு உற்சாகமான நாள். வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: 05, 06 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *