`ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயர்’ – கோரிக்கை வைக்கும் தமிழ் அமைப்புகள்

Img 20240108 Wa0027.jpg

அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 41 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசால் கட்டப்பட்ட பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய மைதானத்தால் பாரம்பரிய அலங்காநல்லூரின் பெருமை மறையும், வாடிவாசலுக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்

மற்றொரு தரப்போ புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை ஏற்றுக்கொண்டாலும் அதற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதுரை கலெக்டரிடம் மனு அளித்த 23 தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு அரசியல்வாதிகளின் பெயரை வைப்பது சரியாக இருக்காது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகவும், வீரத்தின் அடையாளமாகவும் விளங்கி வரும் ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டு வரும் திடலுக்கு செங்கோல் தவறாமல் ஆட்சி செய்த ஆரியப்படை கடந்து தமிழர் வீரத்தை நிலைநாட்டிய பாண்டிய நெடுஞ்செழியனின் பெயரை சூட்ட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்கள்.

தமிழ் அமைப்புகள்

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மைதானம் வரை 22 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்களும், மனை நிலங்களும் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டுத்தொகை பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை, ஒரு மாதத்தில் பணம் தருவதாக கிராம மக்களிடம் உறுதி அளித்து ஏமாற்றியுள்ளதாகவும் புகார் எழுப்பி வருகிறார்கள்.

வருகின்ற 23-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மைதானத்தை திறந்து வைக்க உள்ளார் என்று சொல்லப்படுவதால் இறுதி கட்ட வேலைகள் விரைவாக நடந்துவருகிறது. அதற்குள்ளாக தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவார்களா என்று காத்திருக்கிறார்கள் மக்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கால்கோள் விழா

புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை வைத்து பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற 17-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கான முகூர்த்தக்கால் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வழக்கமான வாடிசாசலில் நடப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *