டெல்லி: மசூதியில் நெரிசலால் சாலையில் தொழுகை… இஸ்லாமியர்களை உதைத்த காவலர் சஸ்பெண்ட் | delhi police officer kicks muslims during namaz

Gridart 20240309 101323720.jpg

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியதும், பலரும் போலீஸ் அதிகாரியின் செயலை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யால் தீவிரவாதி என சாட்டப்பட்ட எம்.பி டேனிஷ் அலி, “இந்தியாவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் பிரார்த்தனை செய்யும் போது, அவர்கள் மீது மலர் தூவப்படும் என்றும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்யும்போது உதைக்கப்படுவார்கள் என்றும் நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை” என்று ட்வீட் செய்தார்.

இன்னொருபக்கம், சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ தொடர்பாக, பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “இந்தியா சிறுபான்மையினரின் சொர்க்கமாக இருக்கிறது. ஒரு சிலரின் கொடுமையால் இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்க முடியாது” என்று ட்வீட் செய்தார். இருப்பினும், இந்த விவகாரம் பெரிதாக வெடிக்க, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, டெல்லி (வடக்கு) டிசிபி மனோஜ்குமார் மீனா, “வீடியோவில் நமாஸ் செய்ப்பவர்களை எட்டி உதைக்கும் போலீஸ் அதிகாரி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதேசமயம், காங்கிரஸ் எம்.பி இம்ரான் பிரதாப்காரி, “டெல்லி இந்திரலோக்கில் நமாஸ் செய்தவர்களை உதைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், அந்த அதிகாரி மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் எப்போது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது” என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *