`தம்பி பிரதமர்… மகள் பஞ்சாப் மாகாண முதல்வர்’ – பாகிஸ்தானின் கிங்மேக்கராகும் நவாஸ் ஷெரீப் முடிவு | Brother Prime Minister: Daughter Punjab Chief Minister: Nawaz Sharif the king makera

Fbw4svmghcpylako7shl.webp.png

பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் ஷெரீப் பதவியேற்க இருக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் இவர்களுக்கு ஆதரவு கொடுத்து இருப்பதால் புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. ஆனால் ராணுவம் இவர்களுக்கு எவ்வளவு நாட்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்று தெரியவில்லை. ராணுவம் தனது முடிவை மாற்றிக்கொண்டால் உடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும். நவாஸ் ஷெரீப் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு இருந்ததால் அவர் பிரதமராக பதவியேற்க விரும்பவில்லை.

264 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நவாஸ் ஷெரீப் கட்சிக்கு 80 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. ஆனால் தங்களது கட்சி ஆட்சியமைக்க மேலும் 6 கட்சிகள் ஆதரவு கொடுத்து இருக்கிறது என்று நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக இம்ரான் கான் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை எதிர்த்து சட்டப்பூர்வமாக போராடப்போவதாக அக்கட்சி தெரிவித்து இருக்கிறது. ஆனால் அதனை தேர்தல் கமிஷன் நிராகரித்து இருக்கிறது.

பாகிஸ்தான் தேர்தல் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அதிகப்படியான சுயேச்சைகள் வெற்றி பெற்று இருப்பதால் ஏற்கனவே இருக்கும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் சிறுபான்மை அரசாக புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக 47.6 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. ஷெஹ்பாஸ் ஷெரீப் ஏற்கனவே ஒரு முறை நாட்டின் பிரதமராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *