“இளைஞர் என்று சொல்ல வேண்டாம்; என் பெண்ணே கல்லூரி படிப்பை முடித்துவிட்டார்!” – கார்த்தி சிதம்பரம் | karthi chidambaram interview in puthukottai regarding 2024 election

Karthik Chidambaram 2.jpg

என்னை இளைஞர் என்று சொல்ல வேண்டாம். என் பெண்ணே கல்லூரி படிப்பை முடித்து விட்டார். எவ்வளவு காலம் தான் இளைஞர் என்று நான் என்னையே கூற முடியும்.

தமிழ்நாட்டில் சினிமா துறையில் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது தவறான கருத்து, தவறான புள்ளி விவரம். சினிமா துறையில் வெற்றி பெற்றவர்கள் இரண்டு பேர் தான். ஒன்று, எம்.ஜி.ஆர் மற்றொன்று ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் பெரிய கட்சியான தி.மு.க-விலிருந்து வெளியே வந்து கட்சி தொடங்கி வெற்றியடைந்தார். ஜெயலலிதா அவர் ஆரம்பித்து வைத்த கட்சியை வழிநடத்தி அதில் மூலம் வெற்றி அடைந்தார். ஜெயலலிதா புதிதாக கட்சி ஒன்றும் தொடங்கவில்லை. சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் அந்த அளவு வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் போட்டியிட கூறினால் நான் போட்டியிடுவேன். மேலும், சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால் போட்டியிடுவேன் அல்லது மாற்றுத் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று கூறினாலும் அங்கு போட்டியிட தயாராக உள்ளேன். பா.ஜ.க வெளியிட்டது வெள்ளை அறிக்கையே கிடையாது. வெள்ளை அறிக்கை என்றால் எங்களது பத்தாண்டு கால ஆட்சி முடிந்தவுடன் அவர்கள் அதற்கு வெள்ளை அறிக்கை கொடுத்திருக்க வேண்டும்.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
தே.தீட்ஷித்

ஆனால், எங்கள் பத்தாண்டு முடிந்து இவர்கள் பத்தாண்டு ஆட்சி செய்து முடித்தவுடன் நாங்கள் செய்த பத்தாண்டுக்கு வெள்ளை அறிக்கையை வெளியிடுகின்றனர். பா.ஜ.க-வின் வழக்கமே நேரு என்ன செய்தார்…அதற்கு முன்பு உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்று பேசுவதும், குற்றம் சுமத்துவதும்தான். இவர்கள் பத்தாண்டு ஆட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே வெள்ளை அறிக்கை கொடுத்திருந்தால் அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம். தற்போது பிரசாரத்திற்காக ஒரு புள்ளி விவரத்தை கூறுகிறார்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பா.ஜ.க கொடுக்கும் புள்ளிவிபரம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் அதற்கு மறு அறிக்கையை கொடுத்து உள்ளோம். கடந்த 2014 – ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது யாரும் நான் போட்டியிடுகிறேன், நீ போட்டியிடுகிறேன் என்று சிவகங்கை தொகுதியில் கூறவில்லை. தற்பொழுது வெற்றி அடையக்கூடிய தொகுதி என்பதால் தற்போது கட்சிக்குள்ளையே நான் நீ போட்டியிடுவதாக போட்டிகள் வருகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *