District Collector did this for Differently Abled People | மாற்றுத்திறனாளிகளை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்: நெகிழ்சியில் மக்கள்

366149 Collector.jpg

வேலூர் மாவட்டம்: குடியாத்தத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்த அவர் அதிகாரிகளுக்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (10.02.2024) ஆய்வு மேற்கொண்டார். அப்போது சீவூர் பஞ்சாயத்து கல்லூர்  கிராமத்திற்கு  ஆட்சியர்  வருவதை அறிந்த  முருகன் நகர், துர்க்கை நகர் பகுதி சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் பொதுமக்களும் அவரை காண வேண்டும் என காத்துக் கொண்டிருந்தனர்.

ஆட்சியர் வருவதைக்கண்ட மாற்றுத்திறனாளி ஒருவர்  கையெடுத்து கும்பிட்டதைக் கண்ட அவர் காரை விட்டு இறங்கி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்தப் பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று அவர் பார்வையிட்டார்.

மேலும் படிக்க | கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு – வாடிக்கையாளர்கள் பதற்றம்

மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் கழிவுநீர் கால்வாய் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு  வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர  வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட்டார்.

தேர்தல் அன்று வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு  பாதுகாப்பு வழங்க புதிய வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டனர்.

மாவட்ட ஆர்சியர் அவர்களை வந்து பார்வையிட்டது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள்  மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எந்த மாவட்ட ஆட்சியரும் இந்த பகுதிக்கு நேரில் வரவில்லை எனவும் தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் தங்களை நேரில் வந்து பார்த்தது தங்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | சென்னை மக்களே… ஜெமினி பிரிட்ஜ், நுங்கம்பாக்கத்தில் முக்கிய போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *