2024 Election: கூட்டணிக் கட்சிகளுக்கு வலை… அதிமுக-வுக்கு ‘செக்’ வைக்குமா பாஜக-வின் புது ரூட்?! | is BJP planning to pull AIADMK allies?

Edappadi Narendra Modi.jpg

இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், “2019 தேர்தல் களம் வேறு. தற்போதைய களம் வேறு. பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். எனவே அதிமுக இல்லாமல் நாங்கள் தனியாக தேர்தலை சந்திக்க திட்டம் வகுத்திருக்கிறோம். இதன்படி 22 தொகுதிகளில் நாங்கள் நிற்கிறோம். மீதம் இருக்கும் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்போம். அதன்படி புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒரு சீட் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். அ.ம.மு.க டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க பிரேமலதாவும் தலா 2 தொகுதிகள் கொடுக்கப்படும். ஓபிஎஸ்க்கு 3 இடங்களும், பாமகவுக்கு 7 இடங்களும் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். கூட்டணிக்கு கூடுதலாக கட்சிகள் வருகை மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் புதிய கோரிக்கைகளுக்கு ஏற்ப இதில் சில மாறுதல்கள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள். பாஜகவின் கூட்டணி கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்குமா? அதிமுக-வின் எதிர்வினை எப்படி இருக்கும்? பாஜக-வின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேர்தலில் அதிமுக தனித்து விடப்படும் நிலை வருமா? இதெல்லாம் போகபோக தான் தெரியும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *