Minister Muthusamy attends function at kovai school | விஜய் தொடங்கிய கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்: அமைச்சர் முத்துசாமி

363469 Minister.jpg

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

தொடர்ந்து அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், இதில் அவர், “6 லட்சம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் இன்று கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் விளையாட்டுப் போட்டிகளை மிக அருமையாக நடத்தியுள்ளனர். அரசு சார்பாக நலத்திட்டம் நிகழ்ச்சி ஆர் எஸ் புரத்தில் நடைபெறுகிறது. ஏழை அடிதட்டு மக்கள் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.

மக்களோடு முதல்வர் திட்டத்தை தொடங்கி மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் நடவடிக்கை எடுத்து மிகச் சிறப்பாக மாவட்ட வாரியாக திட்டம் நடைபெற்று வருகிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படுத்தி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் மக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. 601 பேருக்கு மனுக்களுக்கான தீர்வை நாங்கள் இன்று கொடுக்கிறோம். அதில் 11 கோடியே 53 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்று வழங்க உள்ளோம்.

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வருகிற எட்டாம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கு பெறுகிறார். அதே போன்று வருகின்ற 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார். 

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா இருந்தாலும் மிக விரைவாக திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு மருத்துவமனை கட்டிடங்கள் மிக விரைவாக திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். 

இலவச மடிக்கணினி குறித்தான பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

விஜய் அரசியலுக்கு வந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, “புதுசா வருபவர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் மரியாதை நாங்கள் விஜய் தொடங்கிய கட்சிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம். திமுகவை பற்றி மக்களுக்கு தெரியும். திமுக தனித்துவமான கட்சி. நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் தேர்தலுக்கு என்று தனியாக நாங்கள் வேலை செய்யவில்லை. 

அரசு இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி திமுக தொடர்ச்சியாக மக்களுக்கு பணி செய்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போதும் பணி செய்து வருகிறோம்.தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு நாங்கள் பணி செய்வதில்லை. மக்களை நோக்கி எப்போதும் பணி செய்வோம். நாம் தமிழர் கட்சி மீது வெறுப்புணர்ச்சியோடு என்.ஐ.ஏ சோதனை செய்தால் அது தவறு. ஆனால் அதைப் பற்றி நாங்கள் இப்போது கருத்து சொல்வது சரியில்லை. மதுபானம் விலை உயர்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை” என்றார். 

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ,  வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால், மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | அரசு பள்ளியில் ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர், கடுப்பில் வெளியிட்ட உத்தவரவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *