Manithaneya Makkal Katchi Leader MH awahirullah On Budget 2024 | மனிதநேய மக்கள் கட்சியின் எம் எச் ஜவாஹிருல்லாவின் பட்ஜெட் விமர்சனம்

363180 Budget 2024 25.jpg

ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை: மாய பிம்பத்தை கட்டும் முயற்சி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், இந்தியா வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியின் இறுதி நிதிநிலை அறிக்கையாக இன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதி நிலை அறிக்கை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
ஒன்றிய பாஜக தலைமையிலான அரசின் சாதனைகள் என, இந்த இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சா் பத்திக்குப் பத்தி உண்மைக்குப் புறம்பான வார்த்தைகளால் அலங்கரித்து இருக்கிறார் என்று கூறும் அவர், 2019  மீண்டும் ஆண்டு ஆட்சிக்கு வந்தபிறகு, அடிப்படை ஆண்டை (Base year)  மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியை ஒப்பிடும் முறையைத்  தனக்குச் சாதகமாக மாற்றி, அனைத்து நிதிநிலை உரையிலும் “இந்திய அரசு வளர்ச்சிப் பாதையில்” என்ற பொய்யான பிம்பத்தைக்  நிதி அமைச்சர் காட்டும் முயற்சியின் இறுதி அத்தியாயம் இன்றைய நிதி நிலை அறிக்கை என்று அவர் சமூக வலைதளம் எக்ஸ்-இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Health Sector: சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் இவ்வளவு சலுகைகளா? குஷியில் ஆஷா பணியாளர்கள்! 

கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டுக்காட்டியுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா, பட்டியலின. பழங்குடி  மற்றும் சிறுபான்மை மக்களுக்கான நிதி இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடு ரூ 9,409 கோடியிலிருந்து ரூ 6,780 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது, பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடு  ரூ 4295  கோடியிலிருந்து Rs 3,286 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது, சிறுபான்மை மக்களுக்கான நிதி  ரூ 610 கோடியிலிருந்து தற்போது ரூ 555 கோடியாகக் குறைந்து உள்ளது என்று அவர் சுட்டிகாட்டுகிறார்.  

மேலும் படிக்க | Budget vs Women: பெண்களுக்கு மத்திய அரசு செய்தவை என்ன? நிதியமைச்சரின் பட்ஜெட் உரை

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு திட்டங்களையும் தீட்டாமல், காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விமர்சித்த பாஜக, இன்று அதற்கு ரூ88,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 
 
ஊரக  வேலை வாய்ப்பு  திட்டம் போன்ற ஊரக வறிய மக்களுக்கு உதவிடும் திட்டத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பாஜகாவால் கொண்டு வர முடியாதது அவர்களது இயலாமையைக் காட்டுகிறது. உட்கட்டமைப்பு, கிராம வளர்ச்சி, புதிய வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற எந்த ஒரு புதிய திட்டமும் இல்லாத வெற்று ஆவணம் இந்த வரவு செலவு அறிக்கை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறுகிறார்.
 
மேலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை எதிர்நோக்கிய நாட்டு மக்களுக்கு, இந்த வரவு செலவு அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என எம் எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை’ பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *