இம்ரான், அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கோர்ட்! – அஸ்தமனமாகிறதா அரசியல் வாழ்க்கை? | Imran Khan sentencing updates: Ex-Pakistan PM, wife jailed for 14 years

62543168e183d.jpeg

பாகிஸ்தானின் பிரதமராக 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிழந்தார். அதைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 150 வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாகச் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

அதைத் தொடர்ந்து ரகசியக் காப்புறுதியை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கில், மேலும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவிக்கு இன்று 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி 10 ஆண்டுகள் பொதுப் பதவியில் இருப்பதற்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *