`Secular, Socialist’ இல்லாமல் அரசியலமைப்பின் முன்னுரை – விவாதத்தை கிளப்பிய MyGovIndia பதிவு | Secular and Socialist words removed from indian constitution preamble page in central govt posted image

Gridart 20240127 130314714.jpg

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை கூறுவது என்ன?

டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு, 1950-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில், `இறையாண்மை (Sovereign) ஜனநாயக (Democratic) குடியரசு (Republic)’ என்ற வார்த்தைகள் அடங்கிய வாசகம் இடம்பெற்றிருக்கும்.

1950-ல் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை பக்கம்

1950-ல் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை பக்கம்

அதன்பின்னர், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை (Emergency) பிரகடனப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், 1976-ல் இந்திய அரசியலமைப்பில் 42-வது திருத்தத்தின் ஒருபகுதியாக, அரசியலமைப்பின் முன்னுரையில் ஏற்கெனவே இருந்த வார்த்தைகளுடன், மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளும் சேர்க்கப்பட்டது.

நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் முன்னரை

நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் முன்னரை

அன்றுமுதல் இதுவே நடைமுறையில் இருக்கிறது. மேலும், அரசியலமைப்பின்படி இந்தியாவுக்கென்று குறிப்பிட்ட மதமோ, மொழியோ கிடையாது. அனைத்து மதத்தினரும், அவரவர் மொழி, கலாசாரத்துடன் ஒற்றுமையாகச் சுதந்திரமாக வாழும் மதசார்பற்ற நாடக இந்தியா இருக்கும் என்றே அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படியிருக்க, பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தினர் வணங்கும் ராமர் கோயிலின் திறப்பு விழாவை, அரசு விழா போல பிரதமர் முன்னிலையில் நடைபெற்றதும், அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் நீக்கப்படுவதும், பா.ஜ.க தனது பெரும்பான்மைவாத அரசியலை முன்வைத்து, சிறுபான்மை மதத்தினரை நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *