`அமைச்சரின் பெயரில் பணமா… கற்பனை; பொய்களால் புனையப்பட்ட செய்தி’ – அமைச்சர் மூர்த்தி மறுப்பு | Minister moorthi explained on department charges

Moorthy.jpg

பதிவுத்துறை அமைச்சரால் நடத்தப்படும் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதிவுத்துறை சார்ந்த சங்கங்களின் கோரிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின்போது கையூட்டு பெற மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தர அமைச்சரால் கோரிக்கை வைக்கப்பட்டது.

அமைச்சர் பி.மூர்த்தி

அமைச்சர் பி.மூர்த்தி

லஞ்ச புகார் குறித்த விவரங்கள் பதிவுத்துறை தலைவருக்கோ அல்லது மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கோ அனுப்பப்பட வேண்டும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் குறிப்பிட்ட தொகை பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்று கற்பனையான மற்றும் பொய்களால் புனையப்பட்ட செய்தி பரப்பப்படுவது விபரீதமான உள்நோக்கம் கொண்டதாகும். ஆவணங்களைப் பதிவு செய்து கொண்டிருப்பவர்களிடமே இது குறித்த உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டை மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து தமிழக பதிவுத்துறையின் சீர்திருத்தங்களைப் பார்வையிட்டு தங்கள் மாநிலங்களில் அவற்றை செயல்படுத்த முனையும் வகையில் தமிழக பதிவுத்துறை மிகப்பெரிய சீர்திருத்தங்களுடனான வளர்ச்சியை அடைந்துள்ளது.

மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்பாக வருடத்திற்கு ரூ 10,000 கோடி வருவாய் மட்டுமே எட்டி வந்த பதிவுத்துறையில் கடந்த ஆண்டில் ரூ 17 ஆயிரத்து 297 கோடி வருவாயை அடையும் வகையில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்நிலையில் பதிவுத்துறையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில்  உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது உள்நோக்கம் கொண்டதாகும்.

இடைத்தரகர்களோ, ஆவண எழுத்தர்களோ, சார்பதிவாளர்களோ கையூட்டு கோரினால் இந்த 9498452110, 9498452120, 9498452130  எண்களில் தொடர்பு கொண்டு புகாரைத் தெரிவிக்கலாம். விரிவான புகார்களை நேரடியாகவே பதிவுத்துறை தலைவருக்கோ அல்லது மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கோ அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கோ அனுப்பலாம். மேலும், அமைச்சர், அதிகாரிகளின் பெயரில்  கையூட்டு கேட்டால், புகார்களை ctsec@tn.gov.in என்ற இமெயில் முகவரிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு செயலாளருக்கு நேரடியாக அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *